ஒரு வழியா எல்லோருக்கும் விடுதலை கொடுத்த வெற்றிமாறன்.. டங்குவாரை கிழித்த பொல்லாத அசுரன்

எல்லோருக்கும் 100% திருப்தி என்றால் வெற்றிமாறனுக்கு 200 சதவீதம் திருப்தி இருந்தால் தான் வேலையை முடித்து ஓரங்கட்டுவார். அப்படி விடுதலை படத்தின் நடிகர்களின் டங்குவாரை கிழித்து வேலை வாங்கிய வெற்றிமாறன் ஒரு வழியாக பூசணிக்காய் உடைக்க நாள் பார்த்து விட்டார்.

விடுதலை முதல் பாகம் வந்து கிட்டத்தட்ட ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. ஆனால் முதல் பாகம் ரிலீஸ் ஆனதில் இருந்து மூன்றாவது மாதம் இரண்டாம் பாகம் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில் இன்றுவரை ரிலீசாகவில்லை. முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்தில் முக்கவாசி போர்ஷன் முடிந்து விட்டது என கூறி வந்தனர்.

டங்குவாரை கிழித்த பொல்லாத அசுரன்

இரண்டாம் பாகத்துக்காக எடுத்த ஷார்ட்களில் வெற்றி மாறன் முழு திருப்தி அடையாமல் மீண்டும் முதலில் இருந்து எடுக்க ஆரம்பித்துவிட்டார். அதுவும் தேனி மலைப்பகுதியில், மிகவும் சிரமத்துடன், காட்டுக்குள் கடும் குளிரில் எடுத்து வந்தனர். இப்பொழுது ஒரு வழியாக 90 சதவீதம் படம் முடிந்து விட்டது.

முதல் பாகத்தில் நடிக்கவிருந்த பாரதிராஜா காட்டுக்குள் தாக்குபிடிக்க முடியாமல் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இப்பொழுது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் கடைசி பத்து நாட்கள் மட்டும் ஷூட்டிங் மீதம் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த பிறகுதான் தான் வெற்றிமாறன் முழு திருப்தி அடைந்திருக்கிறார். மொத்த பட குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்

தேனியில் முழுவதுமாக சூட்டிங்கை முடித்துவிட்டு கடைசி மீதம் இருக்கும் பத்து நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டுள்ளனர். ஜூலை 20ஆம் தேதிக்குள் முழு படத்தையும் முடித்து விடுவாராம் வெற்றி மாறன். அதன் பின் போஸ்ட் ப்ரொடெக்சன் வேலைகளை முடித்து வெகு விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்.

Next Story

- Advertisement -