வாடிவாசல் திறக்க புது சாவி ரெடி பண்ணிய வெற்றிமாறன்.. மூக்கை உடைத்து திருப்பி அனுப்பிய அக்கடதேச நடிகர்

vetrimaaran-director
vetrimaaran-director

Vaadivaasal: வெற்றிமாறன், சூர்யா பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. வாடிவாசல் படத்திற்கு போடப்பட்ட பெரிய பூட்டால் இப்பொழுது வெற்றிமாறன் ஒரு புது ரூட்டை கண்டுபிடித்து மூக்கு உடைந்து இருக்கிறார். சூர்யா இந்த படத்தில் அமீர் நடிப்பதால் சில பல மன கசப்பில் இருந்து வருகிறார்.

இரண்டு, மூன்று வருடங்களாகவே இந்த படம் இழுத்து அடித்துக் கொண்டு போகிறது. அதனால் இனியும் இழுத்துக் கொண்டே போனால் இந்த கதைக்கு ஆபத்து, படத்தை சீக்கிரம் எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் வேறு ஒரு ஹீரோவை நாடி இருக்கிறார்.

அந்த தெலுங்கு ஹீரோ இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டு வெற்றிமாறனை திருப்பி அனுப்பி விட்டாராம். தெலுங்கு திரை உலகில் எப்பொழுதும் மசாலா படங்களை தான் அதிகம் விரும்புவார்கள். அந்த ஹீரோவும் எனக்கு இப்படி ஒரு படம் தான் வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மூக்கை உடைத்து திருப்பி அனுப்பிய அக்கடதேச நடிகர்

தெலுங்கு தேசத்தில் கொடி கட்டி பறக்கும் நடிகர் ராம்சரணை எப்படியாவது வாடி வாசலுக்கு கொண்டு வந்து விடலாம் என அவரை தான் சந்தித்திருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் தெலுங்கு சினிமா உலகில் அவர்கள் எதிர்பார்க்கும் கதையே வேறு. அவர்களுக்கு கலர் கலராக எல்லாம் இருக்க வேண்டும்.

பொதுவா வெற்றிமாறன் படம் என்றால் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். தெலுங்கு படங்களிலோ அருவாள், கத்தி என கொடூர ஆயுதங்களோடு எதிரிகளை தெறிக்க விட வேண்டும். இந்த மாதிரி கதை நிச்சயமாக ராம் சரணுக்கு செட்டாகாது. அவர் ஒரு முழு நீள ஆக்சன் படத்தை விரும்புகிறார். இதை தவிர அக்கட தேசத்தில் வெற்றிமாறன் தேடிப்போன 4 ஹீரோக்கள்,

பிரித்திவிராஜ்
ராம் சரன்
ஜூனியர் என்டிஆர்
சுதீப்
ராம் பொத்தினேனி

வாடிவாசல் பஞ்சாயத்தால் தூக்கத்தை தொலைத்த வெற்றிமாறன்

Advertisement Amazon Prime Banner