உச்சக்கட்ட சந்தோசத்தில் கண்ணம்மா.. பாரதியால் கதறி கூப்பாடு போடும் வெண்பா!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் எப்படியாவது பாரதியை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் கண்ணம்மாவிடமிருந்து ஒன்பது வருடங்களாக பாரதியை பிரித்து வைத்தாலும் வெண்பாவால் பாரதியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

இதனால் வெண்பாவின் அம்மா அமெரிக்காவிலிருந்து வெண்பாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காகவே சென்னைக்கு வந்திருக்கிறார். பிறகு வெண்பாவிற்கு ரோகித் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து, அவனுடன் வெண்பாவிற்கு திருமணம் நடத்த பார்க்கிறார்.

ஆனால் இதற்கு பிடி கொடுக்காத வெண்பா, சமீபத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் ரோஹித்தை வெண்பாவின் அம்மா, வெண்பாவின் வருங்கால கணவர் என அறிமுகம் செய்தபோது வெண்பா, ‘பாரதி தான் காதலிக்கிறேன்’ என அனைவரின் முன்னிலையிலும் ரோஹித்தை அவமானப்படுத்தினாள்.

உடனே பாரதி, ‘வெண்பாவை திருமணம் செய்து கொள்ள தனக்கு ஒரு சதவீதம் கூட விருப்பமில்லை’ என வெண்பாவை அசிங்கப்படுத்தி விட்டாள். இதன் பிறகு பாரதியின் மீது கடும் கோபத்தில் இருந்த வெண்பா, சிறிது நேரத்திலேயே அவளுக்கு போன் செய்து கதறி அழுது புலம்புகிறாள்.

கடந்த சில நாட்களாகவே பாரதி, கண்ணம்மாவிற்கு சாதகமாகவே ஒரு சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருப்பதால் பாரதி பொண்டாட்டியின் சந்தோஷத்திற்காக இப்படி எல்லாம் செய்கிறாள் என வெண்பாவிற்கு தோன்றுகிறது. அத்துடன் கண்ணம்மாவை விவாகரத்து செய்து கொள்ளும் நோக்கத்தில் இருந்த பாரதி தன்னுடைய மகள் ஹேமா சொன்னதைக் கேட்டு அந்த முடிவையும் தகர்த்துக்கொண்டான்.

தன்னுடைய சித்துவேலைகளை வெண்பா என்னதான் செய்து கொண்டே இருந்தாலும், கண்ணம்மா மற்றும் அவர்களுடைய இரு மகள்களின் வாழ்க்கைக்காக இனிவரும் நாட்களில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ அதிக வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு நடப்பதற்கு அதிக சாத்தியக்கூறு இருப்பதால் வெண்பா கடந்த சில நாட்களாக டம்மி பீசாக மாறிவிட்டார்.

Next Story

- Advertisement -