புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

என்ன மாதிரியே நடிக்கிறியா.? கூப்பிட்டு வெளுத்து விட்ட வடிவேலு.. உண்மையை உளறிய பிரபலம்

காதல் திரைப்படத்தில் நடிகர் பரத்தின் நண்பனாக வந்து அவர்களுடைய காதலை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகுமார். அதன் பிறகு அவர் காதல் சுகுமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

டான்ஸ், கராத்தே, சிலம்பம் போன்ற பல திறமை கொண்ட இவர் ஆரம்ப காலகட்டத்தில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். அதில் அவர் நடிகர் வடிவேலுவின் பேட்ட ராப் என்ற பாடலுக்கு நடனம் ஆடி பாராட்டையும் பெற்றார்.

பின்னர் சின்னத்திரையில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் முதன்முதலாக நடிகர் வடிவேலுவை இமிடேட் செய்து புகழ் பெற்றுள்ளார். அதன் பிறகு நடிகர் நெப்போலியன் நடித்த கலகலப்பு திரைப்படத்தில் வடிவேலுவை இமிடேட் செய்து நடித்தார்.

அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ள சுகுமார் ஒருநாள் நடிகர் வடிவேலு விடுத்த அழைப்பின் காரணமாக அவரை காண அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நடிகர் வடிவேலு மானஸ்தன் திரைப்படத்தில் ஏற்பட்ட விபத்தினால் ஓய்வில் இருந்துள்ளார். அப்போது தன்னைக் காண வந்த சுகுமாரிடம் வடிவேலு நல்லவிதமாக பேசியுள்ளார்.

பின்னர் படங்களில் என்னைப்போல் நடிக்கிறாயா என்று சுகுமாரிடம் வடிவேலு கேட்டுள்ளார். அதற்கு சுகுமார் நான் அறிமுகமான திரைப்படத்தில் மட்டுமே அவ்வாறு நடித்தேன். அதன் பிறகு உங்களை போல் எந்த படத்திலும் இதுவரை நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தவசி படத்தில் உங்களுக்கு பதில் டூப் செய்ய சொன்னபோது கூட நான் நடிக்கவில்லை என்றும், அனைத்தையும் கற்று கொண்ட பின்பே சினிமாவுக்கு வந்தேன் என கூறியுள்ளார். அதைக்கேட்டு வடிவேலுவின் அருகில் இருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  அவரை அடித்துள்ளனர்.

பின்பு சுகமாருக்கு நெருங்கிய நபர் விடுத்த எச்சரிக்கையினால் அவரை விடுவித்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது நடிகர் சிங்கமுத்து மற்றும் இயக்குனர் சீமான் அருகில் இருந்ததாக நடிகர் சுகுமார் கூறியுள்ளார். மேலும் கூறிய சுகுமார் சினிமாவில் ரசிகர்கள் பார்க்கும் முகத்திற்கு பின்னர் ஒரு கொடூரமான முகமும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

kadhal-sukumar-01
kadhal-sukumar-01
- Advertisement -

Trending News