பெரும் முதலாளிகளை கதறவிடும் வடிவேலு.. எங்க பேனர்ல நடிக்க வேண்டாம் என கையெடுத்துக் கும்பிட்ட நிறுவனம்

2006ஆம் ஆண்டு, நடிகர் வடிவேலு ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. இயக்குனர் சிம்புதேவன் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தை இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. படம் வெளியாகி சக்கை போடு போட்ட நிலையில், பிலிம்பேர் விருது, தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் என பல விருதுகளை வாங்கியது. இந்த படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுவும் பல திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் சில வருடங்கள் விலகியிருந்தார். அவர் இல்லாத காலகட்டத்தில் நடிகர்கள் சந்தானம், சூரி, யோகி பாபு என பல நகைச்சுவை நடிகர்கள் உருவாக்கியிருந்தனர்.

இதனிடையே 2019ஆம் ஆண்டு நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக 23 ஆம் புலிகேசி பார்ட் 2 படத்தை தயாரிக்கலாம் என லைகா தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. அதற்கான பூஜைகளையும் செய்து அறிவித்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன்பாகவே பல பிரச்சினைகள் ஏற்பட்டதால் வடிவேலு இப்படத்திலிருந்து விலகினார்.

Also Read : பல கோடி செலவில் மொக்க பாடலை வெளியிட்ட நாய் சேகர் படக்குழு.. வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா

அதன்பின் இத்திரைப்படத்திற்கு நடிகர் சூரி அல்லது நடிகர் யோகிபாபு நடிப்பார்கள் என பெயர்கள் அடிபட்டது. ஆனால் இத்திரைப்படம் அப்படியே பேச்சு மூச்சு இல்லாமல் நின்றது. 23 புலிகேசி படத்தில் வந்த பிரச்சனையை சமரசம் செய்து வடிவேலு சார்பாக பேசிய லைக்கா அடுத்து வடிவேலுவை வைத்து இரண்டு படங்களில் நடிக்க வைத்து வந்தனர். தற்போது நடிகர் வடிவேலு பல திரைப்படங்களில் ரீ-எண்ட்ரி கொடுத்து மீண்டும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

பொதுவாக வடிவேலு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அவரது இஷ்டப்படி டயலாக்குகளை பேசுவது, படத்தின் ஷூட்டிங்குக்கு அவர் சொல்லும் நேரத்தில் வருவது என பல சேஷ்டைகள் செய்வார். இதனிடையே தற்போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வடிவேலு சூட்டிங்கிற்கு சரியாக வருவதாக செய்திகள் அண்மையில் வெளியானது.

Also Read : ரீ என்ட்ரி-யில் ஆழம் பார்த்து காலை விடும் வடிவேலு.. ஓவர் அலப்பறையால் நொந்து போன தயாரிப்பாளர்

இதை அறிந்த லைக்கா தயாரிப்பு நிறுவனம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பாகம் 2 திரைப்படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து வடிவேலுவிடம் அணுகியது. முன்பு இருந்த வடிவேலு மாறி இருப்பார் என்று நினைத்த லைக்கா இப்போது நடிக்கும் இரண்டு படங்களில் அவர் நடந்ததை பார்த்து பயந்து விட்டனர். அதனால் 23ஆம் புலிகேசி பார்ட் 2 கண்டிப்பாக எடுக்க முடியாது இவரை வைத்து என முடிவு செய்து விட்டனர். ஆனால் வடிவேலு மீண்டும் தனது வேலையை காட்டும் விதமாக படப்பிடிப்பிற்கு வருகிறேன் என கூறி விட்டு கலந்து கொள்ளாமல் உள்ளாராம்.

அதற்குள் லைக்கா தயாரிப்பு நிறுவனமும், தொடர்ந்து இந்தியன்2, ரஜினிகாந்த் திரைப்படங்கள் என அடுத்தடுத்து திரைப்படங்களை தயாரித்து வருகிறது. இதனிடையே வடிவேலுவிடம் கையெடுத்து கும்பிட்டு நீங்கள் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பாகம் 2 திரைப்படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டாம் மற்றும் வேறு எந்த படங்களிலும் நாங்கள் இனிமேல் இவரை ஒப்பந்தம் செய்ய மாட்டோம், என வடிவேலுவிடம் லைகா தயரிப்பு நிறுவனம் கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read : தேசிய விருதுக்கு தயாராகும் வடிவேலு.. வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளும் பிரபலம்

Next Story

- Advertisement -