புது ட்ரெண்ட் செட்டை உருவாக்க துடிக்கும் அஜித்.. மூளைகாரனிடம் சரணடைந்த ஏகே

Upcoming Ajith Movies 2024: படங்களில் ஆர்ப்பாட்டத்துடனும் நிஜ வாழ்க்கையில் அமைதியுடனும் தலைக்கனமற்ற தன்மான சிங்கம் அஜித், துணிவு படத்திற்கு பின் சிறிய இடைவேளை  எடுத்து, அடுத்து மகிழ்திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சியில் நடிப்பதாக அறிவித்து இருந்தார்.

இந்த இடைவெளியில் சில லாங் பைக் ரெய்டுகளையும் முடிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார். சில பலவாகி, பல பைக் ரைடு முடிந்த பின் தான் விடாமுயற்சி ஆரம்பிக்கப்பட்டது. தற்போது படம் முடிவடையும் நிலையில் உள்ளது இதனைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி குழுவினருக்கு ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளார்.

Also Read: லியோ போல் செய்ய வேண்டாம்.. விடாமுயற்சிக்கு அஜித் போட்ட கட்டளை

அதாவது சமீப காலமாக முன்னணி நடிகர்கள் தனது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், சர்ச்சைகளை கிளப்பி அதன் மூலம்  படத்தை வெற்றி பெற செய்வதற்கான ஹைப்பை ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றனர். அது போன்று எச்செயலும் தனது படத்திற்கு இருக்கக் கூடாது என்றும், நம் உழைப்பே நம் படத்திற்கு வெற்றியாக இருக்க வேண்டும் என்று கூறி  விடாமுயற்சி பற்றிய எந்த தகவலும் வெளிவராதபடி கவனமாக இருக்கின்றார்கள்.

மேலும் தனது இந்த நீண்ட இடைவெளியை ஈடு செய்யும் விதமாக விடாமுயற்சியை தொடர்ந்து தனது அடுத்த படமான ஏகே 63  வேலைகளை தொடங்கி விட்டார். ஆர் எஸ் இன்ஃபோடைமென்ட் இப்படத்தை தயாரிக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது

ஏ கே 63: சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த ஹிட் கொடுத்த “மார்க் ஆண்டனி” புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் தனது அடுத்த படமான ஏகே 63 யில் இணைய போவதாக அஜித் அறிவித்துள்ளார். இப்படத்திற்காக தொடர்ந்து 70 நாள் கால்ஷீட் கொடுத்து விரைவில் படம் துவங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

விடாமுயற்சி மற்றும் ஏகே 63 அடுத்த ஆண்டு  திரைக்கு வரப்போவது உறுதி. தல கூறிய அன்பு கட்டளைகளை தாண்டி ரசிகர்கள் ஆர்வத்துடன் ஏகே 63 யை எதிர்நோக்கியுள்ளனர்.

Also Read: விடாமுயற்சி சூட்டிங்கிற்கு வந்துட்டு காதலருடன் சுற்றி திரியும் வளர்ந்த நடிகை.. மூட்டை முடிச்சை கட்ட சொன்ன அஜித்