விடாமுயற்சி சூட்டிங்கிற்கு வந்துட்டு காதலருடன் சுற்றி திரியும் வளர்ந்த நடிகை.. மூட்டை முடிச்சை கட்ட சொன்ன அஜித்

Vidaamuyarchi: நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துபாயில் உள்ள அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. பொதுவாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் எல்லாத்துக்குமே அப்டேட்டுக்கு மேல் அப்டேட் வந்து கொண்டிருக்கும். ஆனால் விடாமுயற்சி பட குழு எந்தவித ஆரவாரமும் இல்லாமல் சைலண்ட் மோடில் ஷூட்டிங் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

விடாமுயற்சி படம் ரோடு ட்ராவல்லை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதை. இந்த படத்தில் திரிஷா, ரெஜினா கேசான்ரா, பிக் பாஸ் ஆரவ், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் திரிஷாஅஜித்திற்கு ஜோடியாக நடிக்கிறார். ரெஜினா மற்றும் ப்ரியா பவானி சங்கர் எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை.

நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக பெரிய ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. திருச்சிற்றம்பலம், பத்து தல போன்ற படங்களில் நடித்த அவருக்கு, விடாமுயற்சியில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல், மொத்தமாக பெயரை கெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

Also Read:காவிச் சட்டை, குங்குமம் வேஷம் போடணும்.. தில்லா அஜித் மாதிரி இருக்க முடியாது விஜய்? – ப்ளூ சட்டை

ப்ரியா பவானி சங்கர் அஜர்பைஜானில் நடக்கும் சூட்டிங்கிற்கு தன்னுடைய நீண்ட நாள் காதலருடன் சென்றிருக்கிறாராம். முழுக்க முழுக்க அவருடன் தான் நேரம் செலவிடுகிறாராம். பட குழு தங்கியிருக்கும் சொகுசு ஹோட்டலில் தான் அவருடைய காதலரும் தங்கி இருக்கிறாராம். தயாரிப்பாளர் செலவில் இருவரும் துபாயில் ஜாலியாக பொழுதை கழிக்கிறார்கள்.

இந்த விஷயம் நடிகர் அஜித்தின் காதுக்கு போயிருக்கிறது. அஜித் இந்த விஷயத்தில் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டாராம். படப்பிடிப்பு தளத்திற்கு காதலருடன் சென்றது தவறு இல்லை என்றாலும், தயாரிப்பாளர் காசை கரியாக்குவது தான் தவறாக பார்க்கப்பட்டு இருக்கிறது. இதனால் அஜித் ப்ரியா பவானி சங்கரை படத்தில் இருந்து நீக்க சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் அஜித் போன்ற மிகப்பெரிய ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் ப்ரியா பவானி சங்கர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் விடாமுயற்சி படத்திலிருந்து விலக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியானாலும், பட குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வரவில்லை.

Also Read:கோமாவில் இருந்து எழுந்து வந்த விஜய்.. மொத்த சக்சஸ் மீட்டையும் அசிங்கப்படுத்திய லோகேஷின் வலது கரம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்