சிவகார்த்திகேயன், தனுஷ் போல பேராசைப்படாமல் காய் நகர்த்தும் ஹீரோ.. கையில் இருக்கும் ஒரு டஜன் படங்கள்

Dhanush-Sivakarthkeyan: பொதுவாகவே அகலகால் வைக்கும் போது நின்று நிதானமாக தான் செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். அதுவும் சினிமாவை பொறுத்தவரையில் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல தான். ஒரு படம் வெற்றி பெறுமா, தோல்வி பெறுமா என்பது ரசிகர்களின் கையில் மட்டுமே இருக்கிறது.

அரசியல்வாதிகளுக்காவது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் வெற்றி, தோல்வி பயம் வரும். ஆனால் சினிமாவில் உள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு தங்கள் படம் வெளியாகும் ஒவ்வொரு முதல் நாளும் அந்த பயம் இருக்கும். இதில் சில நடிகர்கள் அதிக பண ஆசையில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்கள்.

Also Read : வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் படத்தை பிடுங்கிய தனுஷ்.. எஸ்ஜே சூர்யா கூட்டணியில் 50வது படம்

அவ்வாறு தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நடிப்பில் பட்டையை கிளப்பினாலும் தயாரிப்பில் இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும் விதமாக படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் தனுஷ் சில வருடங்களாக படம் தயாரிப்பதையே விட்டுவிட்டார்.

சிவகார்த்திகேயன் கதை தான் அனைவருக்கும் தெரிந்தது. படம் தயாரித்து கடனில் அவதிப்பட்டு அதை அடைக்க பல பிரச்சனைகளை சந்தித்தார். ஆனால் தனுஷ், சிவகார்த்திகேயன் போல இல்லாமல் நின்ற நிதானமாக செயல்பட்டு வரும் நடிகர் தான் ஜெயம் ரவி. எப்போதுமே தன்னை மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்.

Also Read : சினிமாவுக்கு வரதுக்கு முன்னால் 5 ஹீரோக்கள் செய்த வேலைகள்.. மேடையிலேயே வச்சி செய்யும் சிவகார்த்திகேயன்

சினிமாவை தவிர அவர் வேறு எந்த தொழிலிலும் கவனம் செலுத்த விரும்பவில்லை. இதுவே தனக்கு நிம்மதியான வாழ்க்கை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தேவையில்லாமல் எதிலாவது தலையை கொடுத்து மாட்டிக்கொண்டால் அதன் பிறகு நிம்மதி தொலைந்து விடும் என்பதற்காக போதும் என்ற மனமே பொன்னானது என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தனக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெயம் ரவி கைவசம் இப்போது இறைவன், சைரன் மற்றும் பிரதர் போன்ற படங்கள் இருக்கிறது. நிதானமாக செயல்பட்டு வருவதால் தான் இப்போது ஒரு டஜன் படங்களை கைவசம் ஜெயம் ரவி வைத்துள்ளாராம்.

Also Read : வரிசை கட்டி நிற்கும் ஜெயம் ரவியின் 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்

- Advertisement -spot_img

Trending News