கை நிறைய காசு இருந்தும் அம்மா முகத்தைக் கூட பார்க்க முடியாமல் போன நாகேஷ்.. பித்து பிடிக்க வைத்த இறப்பு

Nagesh: எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் புதுசு புதுசாக வந்தாலும் ஆரம்பத்தில் நமக்கு அனைவருக்கும் அசால்ட்டான ஒரு காமெடியை கொடுத்தவர்தான் நாகேஷ். தமிழ் திரையுலகில் இவருக்கான ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட நகைச்சுவை நடிகரான இவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத துயர சம்பவத்தை சந்தித்திருக்கிறார்.

அதாவது இவருடைய சொந்த ஊரான தாராபுரம் அருகே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு சொல்லிக்கிற அளவுக்கு பணம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் சினிமாவில் ஆர்வம் இருந்ததால் சென்னைக்கு நடிப்பதற்கு வந்து விட்டார். வந்தாலும் அங்கேயும் அதிக அளவில் சிரமப்பட்டு இருந்திருக்கிறார்.

இவருடைய சோகத்தை இவரின் அம்மாவுக்கு கடிதம் மூலம் எழுதி அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பின் இவருக்கு கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் ஓரளவுக்கு பணம் வர ஆரம்பித்துவிட்டது. அப்படி வந்த தொகையில் 50 ஆயிரம் எடுத்துக்கொண்டு அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு பெட்டியில் பணத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டு இருக்கிறார்.

Also read: நடிப்புக்கு முன் நாகேஷ் கஷ்டப்பட்டு செய்த 5 வேலைகள்.. பின் எம்ஜிஆர், சிவாஜிக்கு தண்ணி காட்டிய கலைஞன்

அத்துடன் அம்மாவை பார்க்கும் பொழுது காரில் போய் இறங்கினால் சந்தோஷப்படுவார்கள் என்று காரை வாடகைக்கு எடுத்து கிளம்பி விட்டார். போகும் வழியில் அவருடைய அம்மா திடீரென்று இறந்து விட்டார். இந்த தகவலை அப்பொழுது ஃபோன் இல்லாததால் சொல்ல முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் சென்னையில் இவர் வேலை பார்த்த அலுவலகத்திற்கு தந்தி மூலம் அனுப்பி இருக்கிறார்கள்.

அதன்பின் நாகேஷ் ஊருக்கு போனதும் அம்மா இறந்த செய்தியை கேட்டு ரொம்பவே கண்ணீர் வடித்திருக்கிறார். பிறகு அவசர அவசரமாக சுடுகாட்டுக்கு சென்ற நாகேஷ் இவர் போவதற்குள் அவருடைய அம்மா முகத்தை மூடிவிட்டு வேறு ஒருவர் அனைத்து இறுதி சடங்கையும் செய்துவிட்டு கொள்ளி வைத்திருக்கிறார்.

கடைசி வரை என்னுடைய அம்மாவின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கத்தி கதறி ஆர்ப்பாட்டம் பண்ணிருக்கிறார். உன் மகன் இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கிறேன் என்பதை தெரியப்படுத்த வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டாய் என்று பித்து பிடித்தது போல் அழுது என்னுடைய இந்த நிலைமை வேறு யாருக்கும் வந்து விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

Also read: நாகேஷ் நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற 5 கதாபாத்திரம்.. மறக்க முடியாத தருமி தாசன்

- Advertisement -spot_img

Trending News