எதிர்நீச்சல் 2 சீரியலை தட்டி தூக்கிய உதயநிதி.. ஜீவானந்தம் போட்ட கண்டிஷன், பதிலடி கொடுக்க வரும் மருமகள்கள்

Ethirneechal 2 And Udhayanidhi: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் திடீரென்று நிறுத்தியதும் அதை ஏற்றுக்க முடியாமல் மக்கள் ஒவ்வொருவரும் மீண்டும் பார்ப்பதற்கு ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் கதை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட சில தடங்கல்களால் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்துவிட்டது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவை சந்தித்து விட்டது.

உடனே சன் டிவி சேனல் தரப்பிலிருந்து எதிர்நீச்சல் சீரியலுக்கு பிரேம் டைம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். இதனால் கோபப்பட்ட ஜீவானந்தம் அப்படி என்றால் உங்கள் சகவாசமே எங்களுக்கு தேவையில்லை என்று நாடகத்தை அவசர அவசரமாக முடித்து விட்டார். இருந்தாலும் இந்த நாடகத்தின் மீது நாங்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருந்தோம்.

எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு போட்ட அஸ்திவாரம்

பெண்களின் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் விதமாக கதை இருந்தது. அதை அவசர அவசரமாக முடித்து கிளைமாக்ஸ் சீனும் சொல்லிக்க மாதிரி இல்லாமல் முடித்து விட்டார்கள் என்று மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனால் ஜீவானந்தம், மக்களின் பேராதரவு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகமாக கதையை கொண்டு வரலாம் என்று முடிவு பண்ணி விட்டார்.

இதனால் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தை நாம் எடுத்து ஒளிபரப்பு செய்யலாம் என்று கலைஞர் சேனலில் இருந்து உதயநிதி சரியான நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு விட்டார். அந்த வகையில் ஏற்கனவே ஜீவானந்தம், கலைஞர் சேனலில் ஒரு சீரியலை கொடுத்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக எதிர்நீச்சல் 2 நாடகத்திற்கு பிள்ளையார் சுழி போடப் போகிறார்.

ஆனால் அதற்கு ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறார் ஜீவானந்தம். அதாவது நாடகத்தை எடுக்கும்போது எந்தவித இடையூறும் கருத்துகளும் சேனல் தரப்பில் இருந்து கொடுக்கக் கூடாது. எந்த முடிவாக இருந்தாலும் அதை நாங்கள் தான் எடுப்போம் என்று ஜீவானந்தம் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். அத்துடன் எதிர்நீச்சல் சீரியலில் சிங்கப்பெண்களாக நடித்த நான்கு மருமகள்களின் பயணம் தொடர போகிறது.

மேலும் இதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேலராமமூர்த்தி வருவதில்லை. அதற்கு பதிலாக மக்களை கவரும்படி மற்றொரு கேரக்டர் குணசேகரன் கதாபாத்திரத்தில் வந்து கலக்குவார் என்று ஜீவானந்தம் ஒரு சஸ்பென்சை வைத்திருக்கிறார். அந்த வகையில் இன்னும் கூடிய விரைவில் இதற்கான அப்டேட்டுகளை வெளியிட்டு கலைஞர் சேனலில் எதிர்நீச்சல் 2 சீரியல் தொடங்கப் போகிறார்.

எதிர்நீச்சல் சீரியலின் சுவாரசியமான சம்பவங்கள்

Next Story

- Advertisement -