ரீமேக்கில் ஃபெயிலியர் ஆன இரண்டு சூப்பர் ஹிட் படங்கள்.. பாலிவுட்டில் சொதப்பிய விக்ரம் வேதா

பெரும்பாலும் ஒரு மொழியில் சூப்பர் ஹிட் அடைந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை இயக்குனர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதில் அதிகமாக பாலிவுட் படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வெளியாகி உள்ளது. தற்போது இதற்கு நேர் மாறாக தமிழ் படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.

சமீபத்தில் ஐந்து தேசிய விருதுகளை பெற்ற சூரரைப் போற்று படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படத்தை சூரரைப் போற்றி இயக்குனர் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். மேலும் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடித்த வருகிறார்.

Also Read :சூர்யாவுக்கு திருப்புமுனையாக அமைந்த 6 படங்கள்.. தேசிய விருதை பெற்று தந்த சூரரைப் போற்று

இந்நிலையில் அண்மையில் இரண்டு படங்கள் அவ்வாறு ரீமேக் செய்து பெரிய அடி வாங்கியுள்ளது.தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

இதை ஹிந்தியில் புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். இதில் சயீஃப் அலிகான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருந்தனர். பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

Also Read :விக்ரம் வேதா படத்தின் முக்கிய காட்சியில் தலையிட்டு மாற்றிய விஜய் சேதுபதி.. கடுப்பான புஷ்கர் காயத்ரி!

மேலும் மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிஃபர் படத்தை இயக்குனர் மோகன ராஜா தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார். பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் படம் நல்ல வரவேற்பு பெற்றது. தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான் கான், நயன்தாரா ஆகியோரை வைத்து காட்ஃபாதர் என்ற பெயரில் மோகன் ராஜா ரீமேக் செய்திருந்தார்.

இப்படம் வெளியாகி ஆரம்பத்தில் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இவ்வாறு மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட் ஆன விக்ரம் வேதா மற்றும் லூசிபர் படங்கள் ரீமேக் செய்து வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை அடைந்தது.

Also Read :சிக்கலில் மாட்டிய மோகன் ராஜா.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட ஜெயம்ரவி

Next Story

- Advertisement -