Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரம் வேதா படத்தின் முக்கிய காட்சியில் தலையிட்டு மாற்றிய விஜய் சேதுபதி.. கடுப்பான புஷ்கர் காயத்ரி!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் மாதவனுக்கு தரமாக அமைந்த படம் தான் விக்ரம் வேதா.
புஷ்கர் காயத்ரி என்ற ஜோடி இந்த படத்தை உருவாக்கி இருந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தபடம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இதற்கு முக்கிய காரணம் சாம் சிஎஸ் இசை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஹிந்தி ரீமேக்கில் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் சல்மான் கான் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறது பாலிவுட் வட்டாரம்.
ஒரு கேங்ஸ்டர் படம் தரமாக இருந்தால் பெரிய அளவு சாதிக்கும் என்பதற்கு விக்ரம் வேதா ஒரு எடுத்துக்காட்டு. விக்ரம் வேதா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து மற்றவர்களை அடக்குவது போல் இருக்கும்.
அந்த பகுதி கொஞ்சம் காமெடியாகவும் எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் முதலில் புஷ்கர் காயத்ரி, விக்ரம் வேதா கதை எழுதும்போது இந்த காட்சிகள் இல்லையாம். படம் படு சீரியஸாக முடியும்படி அமைத்து இருந்தார்களாம்.
ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி தலையிட்டு இந்த மாதிரி மாற்றிக்கொள்ளலாம் என கூறியது தான் தற்போது இருக்கும் விக்ரம் வேதா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி.
இதனால் அதிருப்தியடைந்த புஷ்கர் காயத்ரி பெரிய நடிகர் என்பதால் வேறு எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்களாம். இயக்குனர் சுதந்திரம் இல்லை என பிறகு வருத்தப்பட்டார்களாம்.
