வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தீப்பொறியாய் அனல் பறக்கும் லியோ பட போஸ்டர்.. அக்டோபர் 19 விருந்துக்கு தயாராகும் தளபதி

Leo-Vijay: கடந்த மாதம் ஜெயிலர், இந்த மாதம் ஜவான் என ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில் அக்டோபர் மாத சம்பவமாக லியோ வெளிவர இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டும் மாஸாக இருந்த நிலையில் படகுழு இந்த வாரம் முழுவதும் போஸ்டர்களாக வெளியிட்டு தெறிக்க விட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெளிவர இருந்த அப்டேட் விஜய் ஆண்டனியின் மகள் இறப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

Also read: லோகேஷ், லியோவுக்கே கண்டிஷன் போடும் அனிருத்.. பேராசையால் ஆடும் ஆட்டம்

அதன்படி தற்போது புது போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பு தரப்பு சுவாரஸ்யமான வாசகத்தையும் பதிவிட்டுள்ளது. அதாவது மிளக தட்டி முட்டி என்ன பண்றீங்க ப்ரோ எனக் கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்காகவே பல மாதங்களாக வெறித்தனமாக காத்திருந்த விஜய் ரசிகர்கள் இப்போது வெளிவந்த போஸ்டரை பார்த்து உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதில் தீப்பொறி பறக்க விஜய் ரொம்பவும் ஆக்ரோஷத்தோடு இருப்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

Also read: ஒரு வழியா கழுகுக்கு நாள் குறித்த விஜய்.. மிரட்டப் போகும் லியோ ஆடியோ லான்ச்

மேலும் அமைதியாக இருங்கள் மற்றும் போருக்கு தயாராகுங்கள் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது. பொதுவாகவே லோகேஷ் படங்கள் அனைத்தும் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். ஆனால் லியோ அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்று போஸ்டரிலேயே தெரிகிறது.

அந்த வகையில் இனிவரும் நாட்களில் தயாரிப்பு தரப்பு ரசிகர்கள் எதிர்பார்க்காத பல இந்த அதிர்ச்சிகளையும் கொடுக்க இருக்கிறதாம். இதனால் குஷியான விஜய்யின் தீவிர வெறியர்கள் வா தலைவா, வா தலைவா என்று சோசியல் மீடியாவை ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அனல் பறக்கும் லியோ பட போஸ்டர்

leo-poster
leo-poster
- Advertisement -

Trending News