ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பாரம்பரிய உணவுகளில் சிலருக்கு இருக்கும் ஆபத்து.. இந்த 4 பிரச்சினைகள் இருப்பவர்கள் தொடவே கூடாது

Millets Food: காலத்திற்கு ஏற்ப ஒவ்வொரு விஷயங்களும் மாறிக்கொண்டே வருகிறது. இதில் முக்கியமாக சொல்வது உணவு பழக்கவழக்கங்கள் தான். தாத்தா பாட்டி காலத்தில் இருந்த உணவுகள் தற்போது பார்ப்பதற்கு அபூர்வமாகிவிட்டது. அந்த அளவிற்கு வாய்க்கு ருசியான ஃபாஸ்ட் ஃபுட் க்கு அடிமையாகி கொண்டே போகிறோம். ஆனால் இப்பொழுது அந்த காலத்தில் இருந்த உணவுகளில் இருக்கும் மகத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்கிறது.

அதனால் அந்த உணவுகளை தேடி விலை அதிகமாக கொடுத்து சாப்பிடும் பழக்கத்திற்கு மாறிக்கொண்டே வருகிறோம். ஆனாலும் அப்பொழுது கிடைத்த உணவுகள் எதுவும் இப்பொழுது தரமாக கிடைப்பதில்லை. இருந்தாலும் ஏதாவது ஒரு உணவில் சேர்க்க வேண்டும் என்பதற்காக அதை வாங்கிக்கொண்டு நம்ம பிள்ளைகளுக்கு கொடுத்து வருகிறோம்.

நோய் நொடியின்றி வாழ சில குறிப்புகள்

அந்த வகையில் தற்போது சிறுதானிய உணவுகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதில் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, சோளம், வரகு, கவுனி, சம்பா போன்ற சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீரழிவு, எடை அதிகரிப்பு, உடல் பருமன், மலச்சிக்கல், கல்லீரல் மற்றும் இதய சம்பந்தமான பிரச்சனைகளை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.

இருந்தாலும் இந்த சிறுதானிய உணவுகளை அனைவரும் உட்கொள்ளலாமா என்ற கேள்வி நிலவி வருகிறது. அந்த வகையில் இந்த நான்கு பிரச்சனைகள் இருப்பவர்கள் அதை நினைத்துக் கூட பார்க்க கூடாது. அது என்ன பிரச்சனைகள் யார் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

சரும அலர்ஜி: என்னதான் சத்தானது பாரம்பரிய உணவாக இருந்தாலும் இந்த காலத்தில் புதுசு புதுசாக நோய் வந்து கொண்டிருப்பதால் அனைவரும் சாப்பிடலாமா என்பது சந்தேகமாக தான் இருக்கிறது. அந்த வகையில் சிறுதானிய உணவுகளை அலர்ஜி இருப்பவர்கள் சாப்பிடுவது தவிர்த்து வரவேண்டும். சரும அரிப்பு, இறப்பை குடல் பிரச்சினைகள், ஆஸ்துமா உள்ளவர்கள் சிறுதானிய உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

இறப்பை குடல் பிரச்சினைகள்: அதாவது சிறுதானிய உணவுகள் உடம்பில் ஜீரணம் ஆவதற்கு மிகவும் கடினமான ஒரு உணவு. இதனால் வாய்வு, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இறப்பை குடல் பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய வழிவகுக்கும் அளவிற்கு இருக்கிறது. அதனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சிறுதானிய உணவை தவிர்க்க வேண்டும்.

ஹைப்பர் தைராய்டிசம்: ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் நிச்சயமாக சிறுதானிய உணவுகளை உட்கொள்ளவே கூடாது. இதனால் சில நாடுகளில் இந்த உணவுக்கு கட்டுப்பாடு கூட வைத்து இருக்கிறார்கள்.

செலியா நோய்: இந்த நோய் உள்ளவர்கள் கோதுமை மற்றும் பார்லி போன்ற பசையாக கூடிய உணவுகளை சாப்பிடக்கூடாது. அதனால் சில சிறுதானிய உணவுகளில் பசையாக கூடிய உணவுகள் இருப்பதால் கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். இவர்கள் எல்லா சிறுதானிய உணவுகளையும் உட்கொள்ள முடியாது. அது மட்டும் இல்லாமல் இந்த நோய்கள் இருப்பவர்கள் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனை படியே சிறுதானிய உணவுகளை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா? என்பது கலந்து ஆலோசித்த பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

Trending News