சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தலாமா.? கொஞ்சம் இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க பாஸ்!

Diabetes Patient: சர்க்கரை நோய் இருக்கிறது என்றாலே நாம் ருசித்து சாப்பிடுவதை மறந்து விட்டு பிடித்த உணவுகளுக்கு குட் பாய் சொல்லிவிட்டு பக்குவமாய் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்வதுதான் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கும். அப்படி சாப்பிடும், சாப்பாட்டுக்கே இந்த மாதிரி வரைமுறை இருக்கும் பொழுது மது அருந்துவது மட்டும் விதிவிலக்கு ஆகி விடுமா என்ன? இதைப் பற்றி தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

ஆரம்பத்தில் மது அருந்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வந்து விட்டால் மது அருந்துவதனால் தான் வந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் அதையெல்லாம் விட சர்க்கரை நோய் வருவதற்கு குடும்ப ஜீன்கள், உடல் பருமன், வயது முதிர்ச்சி, வாழ்க்கை முறை போன்ற விஷயங்களால் தான் சர்க்கரை நோயை வருவதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, மது உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்

அந்த வகையில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தினால் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது மது அருந்தும் பழக்கம் பலருக்கு இருந்தாலும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழக்கத்தை வைத்திருந்தால் இவர்களின் உடலுக்கு இன்னும் மிகவும் கேடு விளைவிக்கும் விதமாக அபாயம் ஏற்படும்.

அதாவது சர்க்கரை நோயாளிகள் எந்த காரணத்தை கொண்டும் மது அருந்தவே கூடாது. ஏற்கனவே அவருடைய உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதனால் அவர்கள் உடலுக்கு அவர்களே சூனியம் வைத்தது போல் ஆகிவிடும்.

அதுபோல இன்னொரு விஷயம் காட்டுத் தீ போல் பரவுகிறது. அதாவது தனக்கு ஒரு சாதகமான ஒரு விஷயம் என்றால் அதை யாராவது ஒருத்தர் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வது தான் மனிதனின் இயல்பு. அதுபோலதான் எங்கேயோ யாரோ ஒரு கட்டுக் கதையாக சுகர் நோயாளிகள் அளவாக மது அருந்தினால் எந்தவித பிரச்சினையும் இல்லை என்ற ஒரு நினைப்பில் மது அருந்தி வருகிறார்கள்.

ஆனால் இது முற்றிலும் கேடு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தி விடும். ஏனென்றால் சர்க்கரை நோயாளிகள் மது அருந்தும் பட்சத்தில் அவர்களின் ரத்த சர்க்கரை அளவு சுமார் 30 மடங்கு உயர்ந்து விடும் என ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இதனால் சர்க்கரை நோயாளிகளின் நரம்புகள் சேதம் அடையும் ஆபத்துகளை அதிகம் உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகள் மது அருந்திதினால் மிகவும் இனிய நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால் சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூட மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

உடலை சீராக்க வைக்க சில முக்கிய குறிப்புகள்

- Advertisement -spot_img

Trending News