புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பது ஏன்.? ஆன்மீகத்துடன் அறிவியல் ரீதியாக கூறும் காரணங்கள்

Auspicious purattasi month: புரட்டாசி மாதத்தில் சுதந்திரப் பறவைகளாக ஆடு கோழிகள் எல்லாம் உற்சாகமாக சுற்றி வரும். ஏனென்றால் இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக சாப்பிட மாட்டார்கள் என்பதால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று கசாப்பு கடையிலிருந்து விடுதலை கிடைத்துவிடும். ஆனால் நம் முன்னோர்கள் சொன்ன சில கருத்துக்களின் படி நம் இப்பொழுது வரை இந்த ஒரு புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் தவிர்த்து வருவது ஏன் எதற்கு என்பதை காரணத்துடன் பார்க்கலாம்.

இதை ஆன்மீகத்துடன் சேர்ந்து அறிவியல் ரீதியாகவும் கூறுகிறார்கள். அதாவது புரட்டாசி மாதம் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவிற்கு உகந்த மாதம் என்பதால் இந்துக்கள் யாரும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். அத்துடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளை நினைத்து வீட்டில் பூஜை செய்து அவருக்கு பிடித்தமான காய்கனிகளை வைத்து வணங்குவது ஐதீகம்.

அளவோடு சாப்பிட்டால் நிறைவோடு இருக்கலாம்

ஜோதிட ரீதியாகவும் பார்த்தால் புரட்டாசி மாதம் என்பது கன்னி ராசிக்கு உகந்தது. இந்த மாதத்தின் அதிபதியாக இருக்கும் புதன் கிரகம் மகாவிஷ்ணுவின் அம்சமாகும். அதனால் புதன்கிரகம் சைவத்திற்கு உரிய கிரகம் என்பதாலும் நம் முன்னோர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள நினைத்து விரதம் இருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என்று காலம் காலமாக அறிவுறுத்தி வருகிறார்கள்.

அதனால் காய் கனிகளை எடுத்துக்கொண்டு சைவ உணவுகளை மட்டும் இவருக்கான உணவாக இருப்பதால் அதுவே மக்கள் சாப்பிட வேண்டும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இதுவே அறிவியல் பூர்வமாக பார்த்தால் புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம் குறைந்து காணப்படும்.

இதனால் பூமியின் சுழச்சியிலிருந்து நமக்கு செரிமான குறைவும். வயிற்று உபாதைகளும் ஏற்பட்டு நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் அப்படியே தங்கிவிடும். அதனால் தான் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்த்து வந்தால் நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் நன்மை விளைவிக்கும் என்று நம்முடைய மூதாதையர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதாவது புரட்டாசி மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை, குறைந்து காற்றும் இருப்பதால் பூமியை குளிர்விக்கும். இந்த நேரத்தில் சில மாதங்களாக நம் வெயிலின் தாக்கத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு வந்திருப்பதால் சூட்டை கிளப்பி விடும் உணவுகளை எடுத்தால் சில உபாதைகள் ஏற்படும் என்பதால் இந்த மாதிரியான விஷயங்களை நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அதனால் தான் இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். ஆனால் ஒரு பக்கம் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இதற்கு பல காரணங்கள் சொல்லி இருந்தாலும் இன்னொரு பக்கம் வெயிலின் தாக்கம் மே மாதத்தில் மட்டும்தான் இருக்கும். அடுத்தடுத்த மாதங்களில் நடுநிலையான மழை மற்றும் வெப்பம் இருக்கும் சூழ்நிலையில் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்வது சரியான கருத்துக்கள் இல்லை என்று சிலர் கூறி வருகிறார்கள்.

எது எப்படியோ நம் முன்னோர்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வந்தார்கள். அதையே நாம் இப்பொழுது பாலோ பண்ணி வருகிறோம். வருஷம் முழுவதும் சாப்பிட்ட அசைவத்திற்கு ஒரு மாதமாவது லீவு விடலாமே. இந்த மாதத்திலேயே ஆடு கோழிகள் சந்தோசமாக துள்ளித் திரியட்டும். எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிட்டால் நிறைவோடு இருக்கலாம்.

- Advertisement -spot_img

Trending News