Vijay Tv Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியும் கூட சுவாரஸ்யமான கதையை வைத்து கொண்டு போகாமல் உப்புக்கு சப்பாக நாடகத்தை உருட்டிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஏசி-யை வைத்து கிட்டத்தட்ட 10 நாட்களாக கதை நகர்ந்து வருகிறது.
அதில் தனம் ரூமுக்கு மட்டும் ஏசி வேண்டாம் எல்லோருடைய அரைக்கும் வைத்துவிடலாம் என்று மூர்த்தி முடிவெடுத்தார். அப்பொழுது இவருடைய தம்பிகள் அனைவரும் வேண்டாம் அண்ணா அதெல்லாம் தேவையில்லாத செலவு என்று சொன்னார்கள். அதை எல்லாம் காது கொடுத்து கேட்காத மூர்த்தி ஏசி-யை ஆர்டர் பண்ணி அனைவருடைய ரூமில் வைத்து விட்டார்.
உடனே அவர்களும் இரவு முழுவதும் ஏசி போட்டு சொகுசாக தூங்க ஆரம்பித்து விட்டார்கள். கடைசியில் கரண்ட் பில் வந்ததும் அனைவரும் உறைந்து போய் இதை எப்படி மூர்த்தி அண்ணன் தாங்க போகிறார் என்று புலம்பினார்கள். அதற்கேற்ற மாதிரி மூர்த்தி கரண்ட் பில்லை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் துடித்து விட்டார்.
கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு 28000 ரூபாய் கரண்ட் பில் வந்திருக்கிறது. இதனால் மூர்த்தி, இனி யாரும் பகலில் ஏசி போடக்கூடாது. இரவு ஒரு மணி நேரம் மட்டும் போட்டு தூங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டார். இவர் இப்படி சொன்னதும் ஐஸ்வர்யா கண்ணன் மூஞ்சிய பாக்கணும், அப்படியே இவங்க பிறந்ததிலிருந்து ஏசி-ல தான் உருண்டு பிரண்டு இருக்காங்க போல ரியாக்ஷன் கொடுத்தாங்க.
Also read: குணசேகரனை விட குடைச்சல் கொடுக்கும் கரிகாலன்.. இனி மாரிமுத்துவை பார்க்க முடியாத கடைசி எபிசோடு
அடுத்ததாக அனைவரும் இரவு நேரத்தில் தூங்கும் பொழுது மூர்த்தி மட்டும் தூங்காமல் எல்லாரும் ஏசி போட்டு தூங்குவார்களோ என்று யோசித்து புலம்பி தவித்தார். அதனால் தூக்கமே வராமல் ஒவ்வொரு ரூமுக்கு வெளியே ஏசி-யின் அவுட்டர் ஓடுகிறதா இல்லையா என்று பார்ப்பதையே இவருடைய வேலையாய் போய்விட்டது. அப்படி பார்க்கும் பொழுது கண்ணன் ஐஸ்வர்யாவின் ரூமில் மட்டும் ஏசி ஓடிக்கொண்டிருக்கிறது.
இதை பார்த்த பின்பு நடுராத்திரி என்று கூட பார்க்காமல் அவருடைய ரூம் கதவை தட்டி இப்ப நல்லாதான காத்து வருகிறது ஏன் ஏசி போட்டிருக்கீங்க என்று கேட்கிறார். உடனே ஆஃப் பண்ணி விடுங்கள் என்று சொல்கிறார். ஆனாலும் இந்த ஐஸ்வர்யா கண்ணன் எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் சொகுசு வாழ்க்கைக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் அடுத்தவர்களின் சம்பாத்தியத்தில் பகட்டு வாழ்க்கையில் வாழ ஆசைப்படுகிறார்கள்.