டிஆர்பி ரேட்டிங்கில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய டாப் 6 சீரியல்.. விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி புது சீரியல்

TRP Rating Top 6: சின்னத்திரை பொருத்தவரை ஒவ்வொரு குடும்பங்களும் பார்த்து ரசிக்கும் படியாக மக்களிடத்தில் தினமும் வெற்றி நடை போட்டு வருவது சீரியல் தான். அந்த வகையில் எந்த சீரியலுக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள் என்பது ஒவ்வொரு வாரமும் கருத்துக்கணிப்பின்படி பார்த்து வருகிறோம். அப்படி இந்த வரம் எந்த சீரியல்கள் முதல் ஆறு இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்ப்போம்.

மல்லி: கடந்த வாரம் 8ம் இடத்தில் இருந்த மல்லி சீரியல் இந்த வாரம் 7.21 புள்ளிகளைப் பெற்று 6வது இடத்தை பிடித்து விட்டது. நகைச்சுவை, காதல், ரொமான்டிக் என பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் விடாமல் பார்க்கும் படியாக நச்சுன்னு மக்கள் மனதில் பதிந்து விட்டது.

அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய புது சீரியல்

வானத்தைப்போல: டிஆர்பி ரேட்டிங்கில் எல்லா சீரியல்களும் முன்னுக்கும் பின்னுக்கும் போய்க் கொண்டிருக்கும். ஆனால் தொடர்ந்து பல மாதங்களாக 5வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது வானத்தைப்போல சீரியல். பொன்னி பற்றிய விஷயம் சின்ராசு க்கு தெரியக்கூடாது என்பதற்காக பல தில்லாலங்கடி வேலையை பார்த்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து முதல் நான்கு இடத்தில் உள்ள டிஆர்பி ரேட்டிங்கில் யாரும் எதிர்பார்க்காதபடி அதிரடியாக சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் இந்த ஒரு சீரியல்தான் டாப் 5க்குள் மாத்தி மாத்தி வந்து கொண்டிருந்தது. அதில் தற்போது 4வது இடத்தை சிறகடிக்கும் ஆசை சீரியல் பிடித்திருக்கிறது.

ஆனால் தற்போது இந்த சீரியல் பார்ப்பதற்கு சுவாரஸ்யம் இல்லாத வகையில் ரோகிணியை பற்றிய உண்மை எதுவும் தெரியாமல் முத்து மற்றும் மீனாவின் கேரக்டர் டம்மியாகவே போய்க்கொண்டிருக்கிறது. இதை இன்னும் சூடு பிடிக்க ரோகினியின் பொய்ப்பித்தலாட்டங்கள் வெளியே வந்தால் நன்றாக இருக்கும்.

மேலும் கடந்த பல மாதங்களாக இரண்டாவது இடத்தில் இருந்த கயல் சீரியல் தற்போது 3வது இடத்திற்கு சென்று பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதற்குக் காரணம் கயலின் நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணம் வெறுப்பை உண்டாக்கும் அளவிற்கு இழுத்தடித்துக் கொண்டு போவதால் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது.

இதனால் 2வது இடத்தை புத்தம் புது சீரியல் ஆக ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் வந்துவிட்டது. இதில் கேப்ரில்லா மற்றும் ராகுல் ரவி நடிப்பு எதார்த்தமாகவும் இவர்களுடைய செல்லமான சண்டையை பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் அமைகிறது. அத்துடன் நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண் சித்தி கொடுமையால் அனுபவிக்கும் வேதனையை எடுத்துக்காட்டும் விதமாக கதை நகர்ந்து வருகிறது.

இவர்களின் இருவருடைய மனமும் வித்தியாசமான முறையில் செயல்பட்டு வருவதால் இவர்கள் வாழ்வில் ஒன்றாக இணைந்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் முதல் இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் ஆனந்திக்கும் அன்புக்கும் தான் காதல் கல்யாணம் நடக்க வேண்டும் என்று மக்கள் ஆசையுடன் பார்த்து வருகிறார்கள்.

ஆனால் இதை கெடுக்கும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக மகேஷ் உள்ளே புகுந்து ஆட்டையை குழப்பி வருகிறார். இதனால் கேள்விக்குறியாகும் அன்புவின் காதல் என்ன ஆகப் போகிறது என்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் மக்கள் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறார்கள்.

முந்தைய டிஆர்பி ரேட்டிங்கின் லிஸ்ட்

Next Story

- Advertisement -