Top 6 serials in TRP rating: ஒவ்வொரு வார இறுதியிலும் எந்த சீரியல் மக்கள் மனதில் அதிகமான இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பொறுத்து டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தைப் பிடித்த சீரியல் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
மல்லி: வெண்பாவிற்காக விஜய், மல்லி கழுத்தில் தாலி கட்டி விட்டார். ஆனால் மல்லி மனதார காதலித்த பின்பு தான் விஜய்யை கணவராக ஏற்றுக் கொண்டார். ஆனால் எப்படியாவது இவர்களை ஒன்று சேர விடக்கூடாது என்று நினைத்த விஜய்யின் அக்கா மகள், மல்லிக்கு விஷத்தை கொடுத்து விட்டார்.
இதனால் உயிருக்கு போராடும் மல்லிக்கு ரத்தம் தேவைப்படுவதால் அதற்கு விஜய் ஏற்பாடு பண்ணிவிட்டார். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக சதி நடக்கிறது. இதிலிருந்து எப்படி விஜய், மல்லியை காப்பாற்றுவார் என்பது விறுவிறுப்பான திருப்பங்களுடன் கதை இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 7.45 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த விஜய் டிவி சீரியல்
மருமகள்: ஆதிரை மற்றும் பிரபுக்கு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக வேல்விழி மற்றும் ஆதிரையின் சித்தி மனோகரி கூட்டு சேர்ந்து இவர்களைப் பிரிக்க பார்க்கிறார்கள். ஆனால் என்ன நடந்தாலும் நம்முடைய கல்யாணம் நிச்சயமாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதரவு மற்றும் பிரபு உறுதியாக நிற்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் 8.03 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
வானத்தைப்போல: கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தை பிடித்த வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 8.23 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாடகம் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது.
வழக்கம்போல் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் திருந்துவது போல் பொன்னி, சின்ராஸ் மட்டும் துளசியின் அண்ணன் தங்கை பாசத்தை புரிந்து கொண்டு ஒற்றுமையாக குடும்பத்திற்குள் வாழப்பழகிவிட்டார். அது மட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் பொன்னி மற்றும் துளசி கர்ப்பமாகி ஒரு நிறைவான முடிவை கொடுத்து விட்டார்கள்.
கயல்: இந்த வாரம் 8.68 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. கயல் மற்றும் எழிலின் கல்யாண வேலைகள் அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கயல் அம்மாவிற்காக அனைவரிடமும் அடங்கிப் போய் கல்யாணத்திற்கு வர வேண்டும் என்று கேட்கிறார்.
அப்படி வேதவல்லி வீட்டுக்குப் போன நிலையில் எதிர்பாராத விதமாக நடந்த சம்பவத்தால் வேதவல்லி திருந்தி கயல் கல்யாணத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்து விட்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாசிட்டிவாக வரும் இந்த நாடகம் முடிவுக்கு நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் எத்தனையோ நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இந்த ஒத்த நாடகம் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.76 புள்ளிகளைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது. இன்னும் ரோகிணி பற்றிய விஷயங்கள் மட்டும் வெளியே வந்தால் ஒட்டு மொத்த டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பிடித்து விடும்.
சிங்க பெண்ணே: அன்பு, நான்தான் அழகன் என்று எப்பொழுது வாயைத் திறந்து ஆனந்தியிடம் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்க்கும் விதமாக கதை விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அதே நேரத்தில் எப்படியாவது தன்னுடைய காதலை ஆனந்தியிடம் சொல்ல வேண்டும் என்று மகேஷ் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் இவர்களுடைய முயற்சியை தடுக்கும் விதமாக மித்ரா பல சதிகளை செய்து ஆனந்திக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.13 புள்ளிகளை பெற்ற முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
- TRP Rating: டிஆர்பி யில் கொடி கட்டி பறக்கும் டாப் 6 சீரியல்கள்
- TRP Rating: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 சீரியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
- TRP Rating: குணசேகரனின் தோல்வி சன் டிவிக்கு கிடைத்த வெற்றி