பாபாவுக்கு பின் ரஜினி செய்யாத விஷயம்.. சூப்பர் ஸ்டார் பெயரைக் கெடுத்த விஜய்

vijay-rajini
vijay-rajini

Leo Poster: ரஜினியின் பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு மிகவும் ஆரவாரத்துடன் வெளியானது. இத்திரைப்படம் நிறைய விவாதங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியது. குறிப்பாக ரஜினி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் வெளியாகின. இதனால் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ரஜினி படங்களை ரஜினி ரசிகர்கள் மற்றும் இன்றி குழந்தைகள் இளைஞர்கள் என அனைவரும் பார்க்கும் படமாக அமையும் தருவாயில், அவர் சிகரெட் குடித்து இளைய தலைமுறைகளை கெடுக்கின்றார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Also Read: உருவகேலியால் கர்வமாய் மாறிய ஹீரோ.. லியோ செட்டில் காட்டும் ஓவர் ஆட்டிட்யூட்

அதன் பிறகு ரஜினி அடுத்தடுத்து வந்த படங்களில் அதை நிறுத்திவிட்டு ஸ்டைலுக்காக சுயிங் கம் போட்டு தன்னுடைய ஓப்பனிங் பாடல் காட்சியில் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்தார். இப்போது இதே போல் லியோ படத்தில் விஜய் சிகரெட் குடிக்கும் படியான ஃபர்ஸ்ட் சிங்கிள் போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளி வரவிருக்கும் படம் லியோ. ஒவ்வொரு நாளும் இப்படத்தைப் பற்றிய புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. தளபதி ரசிகர்களும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: சர்ச்சையில் சிக்கிய லியோ போஸ்டர்.. அரசியலுக்கு வர நேரத்தில் இப்படியா?

இந்த நிலையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி நான் ரெடி என்கிற சிங்கிள் ட்ராக் பாடல் வெளியானது. இது குறித்த போஸ்டரில் விஜய் வாயில் சிகரெட் வைத்து கொண்டிருப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பின் அந்த போஸ்டரை டெலிட் செய்து விட்டார்கள். தற்போது மீண்டும் இதே போல் செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் இடம் மற்றும் கட்சி ஆரம்பித்தல் மக்கள் சேவை செய்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ள விஜய், இந்த விஷயத்தில் கோட்டை விட்டுட்டார்.

புது புது சர்ச்சைகளால் இந்த படத்திற்கு கூடுதல் பிரமோஷன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் மற்றும் விஜய் தரப்பு இப்படி செய்கிறார்களா என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளது.

Also Read: லியோ படத்தின் பிரச்சனைக்கு முடிவு கட்டிய விஜய்.. எல்லா பேப்பர்களையும் தூசி தட்டும் லோகேஷ்

Advertisement Amazon Prime Banner