சன் டிவி டிஆர்பி-யை ஊத்தி மூட மற்ற சேனல்கள் களம் இறக்கிய டாப் 5 சீரியல்கள்.. விட்டுப் போன பந்தம் மீண்டும் தொடரும்

Top 5 Serials: சின்னத்திரை சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று பல வருட காலமாக மக்கள் ஒரு வலைக்குள் சிக்கி இருந்தார்கள். எப்பொழுதும் பெண்கள் அழுகிற மாதிரியும், பெண்ணுக்கு பெண் எதிரி என்பதற்கேற்ப வில்லியை பெண்ணாக சித்தரித்துக் காட்டியது. ஆனால் தற்போது சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் காலி பண்ணும் விதமாக மற்ற சேனல்கள் புதுப்புது நாடகங்களை களம் இருக்கிறது. அது என்ன நாடகம் என்று தற்போது பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் முத்து மற்றும் மீனா எதார்த்தமான கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டைகளையும் அதன் பின் ஏற்படும் காதல் உணர்வையும் அழகாக காட்டி வருகிறது. அந்த வகையில் இந்த நாடகம் மக்கள் மனதில் ஒய்யாரத்தில் நின்னு ஃபேவரிட் நாடகமாக இருக்கிறது.

ஆஹா கல்யாணம்: விஜய் டிவியில் இரவு 7:30 மணிக்கு ஆகா கல்யாணம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சூர்யா மகா, டாம் அண்ட் ஜெரியாக சண்டை போட்டுக்கொண்டு நிஜ காதலுக்கு நடுவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு மருமகள் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கு மகாவையும், ஒரு பெண் இந்த மாதிரி இருக்கவே கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஐஸ்வர்யா கேரக்டரையும் கொண்டு வருகிறார்கள்.

Also read: ஜீவானந்தத்தை ஜாமீன் எடுத்த அப்பத்தா.. குணசேகரனுக்கு எதிராக எஸ்கேஆர் செய்யப் போகும் சூழ்ச்சி

அண்ணா: ஜீ தமிழில் அண்ணன் தங்கைகளின் பாசங்களை வைத்து அண்ணா சீரியல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் செந்திலின் நடிப்பும், நித்யா ராம் எக்ஸ்பிரஷனும் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு அண்ணனாக இருந்து நான்கு தங்கைகளின் வாழ்க்கையை கரை சேர்க்கும் பொருட்டாக பொறுப்பான அண்ணனாகவும், குடும்பத்துடன் பார்க்கும் படியாகவும் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இதயம்: ஜீ தமிழில் மதியம் 1.30 மணிக்கு இதயம் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விட்டுப் போன பந்தம் மறுபடியும் ஒன்றாக இணைக்கும் காவியமாக ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இடம் மாறிப்போன இதயம் ஒன்று சேர்வதற்கு துடிக்கும் உணர்வுபூர்வமான காதல் காவியத்தை மையமாக வைத்து இந்த நாடகம் மக்களை அடிமையாக்கி வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மக்களின் பேவரைட் நாடகமாக இருக்கிறது.

மோதலும் காதலும்: விஜய் டிவியில் மாலை 6.30 மணிக்கு மோதலும் காதலும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதை ஏற்கனவே கல்யாண முதல் காதல் வரை நாடகத்தின் காப்பி கதையாக இருந்தாலும் இதில் நடிக்கும் விக்ரம் வேதா நடிப்பு மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. இப்படி சன் டிவியை தவிர மற்ற சேனலில் உள்ள நாடகங்களும் மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Also read: பழைய நட்பில் கைகோர்த்த பாக்யா ராதிகா.. மொத்த வெறுப்பையும் ஒத்த நட்பால் மாத்தி காட்டிய சக்களத்தி

- Advertisement -