ஜீவானந்தத்தை ஜாமீன் எடுத்த அப்பத்தா.. குணசேகரனுக்கு எதிராக எஸ்கேஆர் செய்யப் போகும் சூழ்ச்சி

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவிற்கு ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் குணசேகரன் தான். இந்த உண்மை அனைவருக்கும் தெரிந்தாலும் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லும் அளவிற்கு குணசேகரன் கெத்தாக திரிகிறார். இதனை தொடர்ந்து நீண்ட மாதங்களுக்குப் பிறகு எஸ்கேஆர் வந்திருக்கிறார்.

இப்பொழுது இவர்கள் அனைவரும் சேர்ந்து வியாபார ரீதியாக பேசும் போது வாக்குவாதம் ஆகிறது. இந்த நேரத்தில் எஸ்கேஆர் குணசேகரனை மடக்குவதற்காக அப்பத்தாவை கொன்னது ஜீவானந்தம் இல்லை நீதான் என்று மறைமுகமாக தாக்குகிறார். இதை வைத்தே குணசேகரனை எஸ்கேஆர் காலி பண்ண போகிறார்.

ஆனால் அப்பத்தா இறப்பிற்கு குணசேகரன் ஏதோ ஒரு காரணம் என்பது உறுதியாகி நிலையில் ஞானத்துக்கு மட்டும் ஞானமே இல்லாத அளவிற்கு கண்மூடித்தனமாக அண்ணனை நம்புகிறார். அடுத்ததாக ஜீவானந்தத்தை ஜாமீன் எடுப்பதற்காக சக்தி மற்றும் ஜனனி முயற்சி செய்கிறார்கள். அப்பொழுது லாயர் இவர்களிடம் வந்து ஜீவானந்தத்தை ஜாமீன் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்று கூறுகிறார்.

Also read: பழைய நட்பில் கைகோர்த்த பாக்யா ராதிகா.. மொத்த வெறுப்பையும் ஒத்த நட்பால் மாத்தி காட்டிய சக்களத்தி

அப்படி பார்க்கும் பொழுது ஏற்கனவே ஜீவானந்தம் வெளியே வந்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது. அப்பத்தா இறப்பிற்கு இவர்தான் காரணம் என்று போலீஸ் அரெஸ்ட் பண்ணிய நிலையில் இவரை ஜாமீன் எடுத்தது யாராக இருக்கும். ஆனால் ஜீவானந்தம் வெளியே வர வேண்டும் என்றால் அப்பத்தா உயிரோடு இருக்க வேண்டும் அல்லது இவர் அப்பத்தாவை எதுவும் பண்ண வில்லை என்று சாட்சி கிடைத்திருக்க வேண்டும்.

அந்த வகையில் அப்பத்தாவே, ஜீவானந்தத்தை ஜாமினில் எடுத்து இருக்கலாம். அடுத்ததாக ஜீவானந்தம் ஆசைப்பட்ட மாதிரி ஈஸ்வரி கல்லூரியில் வேலை பார்ப்பதற்கு போகிறார். அங்கே போனதும் தெரிகிறது இந்த வேலையை வாங்கிக் கொடுத்ததே ஜீவானந்தம் தான் என்று.

அதனாலேயே இன்னும் தைரியத்துடன் துணிச்சலாக வேலையில் சேர்ந்து விட்டார். இதுதான் குணசேகரனுக்கு ஈஸ்வரி கொடுக்கும் முதல் அடியாக இருக்கப் போகிறது. ஆக மொத்தத்தில் இனி குணசேகரன் பிஸ்னஸிலும் தோற்கப் போகிறார். வீட்டுப் பெண்களிடமும் தலைகுனிந்து நிற்கப் போகிறார்.

Also read: சீரியல் டிஆர்பிக்காக இப்படி கேவலமா பண்றாங்க.. சேனல்களை ஒதுக்கி வேறு பாதைக்கு செல்லும் குடும்பப் பெண்கள்

Next Story

- Advertisement -