2022ல் கோலிவுட்டுக்கு புதுவரவாக வந்த 5 பிரபலங்கள்.. இயக்குனர் வேண்டாம் நடிகராக அவதரித்த செல்வராகவன்

2022 என்பது தமிழ் சினிமாவை பொருத்தமட்டும் ஒரு பொற்காலமாக இருந்தது என்று சொல்லலாம். 2021ல் கொஞ்சம் தொய்வாக போய்க் கொண்டிருந்த தமிழ் சினிமா இந்த வருடம் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தது. மேலும் இந்த ஆண்டு நிறைய திறமையான நடிகர்களும் கோலிவுட்டுக்கு புதுவரவாக வந்தார்கள். எதிர்பாராதவர்கள் எல்லாம் நடிகர் ஆனார்கள்.

பிரதீப் ரங்கநாதன்: தொடக்க காலங்களில் குறும்படங்களை இயக்கி கொண்டிருந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் தான் கோலிவுட் சினிமாவின் இப்போதைய சென்சேஷனல். 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், இந்த வருடம் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்.

Also Read: நடிகைகளை கேவலமாக விமர்சித்த பிரதீப்.. வாய்ப்பு தராததால் வம்புக்கு இழுக்கும் கோமாளி பட ஹீரோயின்.!

அஸ்வின்: ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் அஸ்வின். இவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். இவர் சீரியல்கள் நடித்ததோடு தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2022 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

அண்ணாச்சி: வட தமிழகத்தில் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பவர் தான் சரவண அருள். இவர் சில வருடங்களுக்கு முன்பு விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் லெஜெண்ட் என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

Also Read: தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

ஷிவானி: ஷிவானி மாடலிங் துறையை சேர்ந்தவர். விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவருக்கு பிக்பாஸ் சீசனில் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இந்த வருடத்தில் ரிலீசான விக்ரம் மற்றும் டிஎஸ்பி போன்ற படங்களில் விஜய்சேதுபதியுடன் நடித்தார்.

செல்வராகவன்: செல்வராகவனுக்கு இந்த வருடம் ஒரு புதிய அவதாரம் என்றே சொல்லலாம். தன்னுடைய இயக்கத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்னுடைய கைவசம் வைத்திருந்த இவர், இந்த வருடம் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர் தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்தார். இப்போது பரகாசூரன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read: முழு சைக்கோவாக மாறிய செல்வராகவன்.. பல உண்மை சம்பவங்களை புட்டு புட்டு வைக்கும் பகாசூரன் ட்ரெய்லர்

Next Story

- Advertisement -