திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

3 வாரங்களாக டிஆர்பியை விட்டுக் கொடுக்காத மூன்று சீரியல்கள்.. இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை

Top 3 Serials: டெலிவிஷன் சேனல்கள் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்னும் நிலைமையில் தான் தற்போது இருக்கிறது. விதவிதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பஞ்சாயத்துகள், சீரியல்கள் என புதுமைகளை சேனல்கள் கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் பிக்கப் ஆகி மக்களிடையே நல்ல ரீச்சை பெறுகிறது. ஒவ்வொரு வாரமும் இந்த டிஆர்பி ரேட்டிங் வரும்போது எந்த சேனல் முதலிடத்தில் இருக்கிறது என்பதுதான் இவர்களுடைய பெரிய போராட்டக் களமாக இருக்கிறது.

சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக் கொடுப்பதே சீரியல்கள் தான். இதனாலேயே நிறைய சேனல்கள் மக்கள் எதிர்பாக்காத நட்சத்திரங்கள், விறுவிறுப்பான சீன்கள் என சீரியலுக்குள் புகுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு சினிமா கதைகளை அப்படியே கொஞ்சம் உல்டா பண்ணி சீரியலாக மாற்றி விடுகிறார்கள். அதுவும் இல்லை என்றால் ஏற்கனவே நன்றாக ஓடிய சீரியலில் இரண்டாம் பாகத்தை எடுக்கிறேன் என்ற பெயரில் நேயர்களின் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Also Read:நொறுங்கிப் போக வைத்த தர்ஷினியின் வாக்குமூலம்.. மாரடைப்பு வர வைத்த எதிர்நீச்சல் ஜீவானந்தம்

கடந்த இரண்டு வருடத்திற்கு முன் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டதாக தான் இருந்தது. அந்த விதியை மொத்தமாக மாற்றிய பெருமை சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்குத்தான் உண்டு. எதிர்நீச்சல் சீரியல் வந்த பிறகு விஜய் டிவி மொத்தமாக காலி ஆகிவிட்டது தான் என்று சொல்ல வேண்டும். அதிலும் கடந்த மூன்று வாரங்களாக இந்த மூன்று சீரியல்கள் தொடர்ந்து தங்களுடைய டிஆர்பியை கைபற்றி வருவதால் விஜய் டிவியின் நிலைமை ரொம்பவும் மோசமாகிவிட்டது.

டிஆர்பியை விட்டுக் கொடுக்காத மூன்று சீரியல்கள்

சிங்கப்பெண்ணே சீரியல்: சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஒளிபரப்பான ஒரு மாதத்திலேயே டி ஆர் பி யில் கொடி கட்டி பறந்த எதிர்நீச்சல் மற்றும் கயல் சீரியல்களை அப்படியே பின்னிறக்கி விட்டது. கிராமத்தில் பிறந்த ஆனந்தி என்ற பெண் தன்னுடைய குடும்ப பொருளாதார சூழ்நிலைக்காக சென்னைக்கு சென்று அங்கு அவள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியலின் கதை நகர்ந்து வருகிறது. சிங்க பெண்ணே சீரியலின் தற்போதைய டிஆர்பி ரேட் 11.50 ஆகும்.

கயல் சீரியல் : நட்சத்திர நடிகர்களான சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் கயல். இந்த சீரியல் தொடங்கப்பட்ட ஒரு மாதத்திலேயே எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு பயங்கர போட்டியை கொடுத்தது. தொடர்ந்து டிஆர்பியில் இரண்டாம் இடத்தை கயல் தொடர் தக்க வைத்து வருகிறது. இந்த வாரம் கயல் சீரியல் 11.02 டிஆர்பி ரேட்டிங் பெற்றிருக்கிறது.

வானத்தை போல சீரியல்: சன் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வானத்தைப்போல சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க அண்ணன் தங்கையின் பாச கதையை கிராமத்து பின்னணி கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. சீரியல் தொடங்கி நான்கு வருடங்கள் ஆகியும் இன்று வரை டிஆர்பி யில் கொடி கட்டி பறந்து வருகிறது. மூன்று வாரங்களாக மூன்றாவது இடத்தை கைப்பற்றி வரும் வானத்தைப்போல சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 10.45.

Also Read:முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

- Advertisement -spot_img

Trending News