இந்த வார டாப் லிஸ்டில் இருக்கும் 10 சீரியல்கள்.. ஆண்டவருக்கே ஆட்டம் காட்டிய சன் டிவி

ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாளில் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டை வைத்து அந்த வாரத்தில் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியல்கள் எது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில்  கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 10 சீரியல்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் வழக்கம்போல் எப்போதுமே டாப் லிஸ்டில் இருக்கும் கயல் சீரியல்தான் இந்த முறையும் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

2-வது இடம் சுந்தரிக்கும், 3-வது இடம் வானத்தைப்போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது. தொடர்ந்து மூன்று இடங்களை பெற்ற சன் டிவி 4-வது இடத்தை தான் விஜய் டிவிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே பின்னுக்குத் தள்ளப்பட்ட விஜய் டிவியின் சீரியல்கள் தற்போது மகா சங்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முன்னிலை வகித்துள்ளது.

கடந்த வாரத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமம் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறியது. இதனால் ஒரு மணிநேரம் ஒளிபரப்பான மகா சங்கமம் டிஆர்பி 4-ம் இடத்தைப் பெற்றுள்ளது.

Also Read: 27 வயதில் மகன், 23 வயது இளம் பெண்ணுடன் திருமணம்.. ஷாக் கொடுத்த வாணி ராணி புகழ் பப்லு

5-வது இடம் சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலுக்கும், 6-வது இடம் ரோஜா சீரியலுக்கும், 7-வது இடம் எதிர் நீச்சல் பெற்றுள்ளது. 8-வது மீண்டும் விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. 9-வது இடம் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலுக்கும், 10-வது இடம் விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலும் பெற்றுள்ளது.

11-வது இடம் தான் பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சிக்கு கிடைத்திருக்கிறது. சின்னத்திரைக்கு ரசிகர்களின் விருப்பமான என்டர்டைன்மென்ட் ஷோபன பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி அடித்து நொறுக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஆண்டவருக்கே ஆட்டம் காட்டியிருக்கிறது சன் டிவியின் சீரியல்கள்.

Also Read: இந்த வருட தல தீபாவளி கொண்டாடும் 8 பிரபலங்கள்.. அலப்பறை செய்ய காத்து கிடக்கும் ரவீந்தர் ஜோடி

இவ்வாறு டிஆர்பி யில் பயங்கர அடி வாங்கி இருக்கும் இந்த சூழலில், பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த ஜிபி முத்து வெளியேறி இருப்பது பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

Next Story

- Advertisement -