வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

2022 ஆம் ஆண்டின் டாப் 10 சீரியல்கள்.. இந்த ஆண்டு முழுவதும் டஃப் கொடுத்த ஒரே சீரியல்

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து இன்னும் சில தினங்களில் புத்தாண்டு துவங்க இருப்பதால், இந்த வருடம் முழுவதும் டிஆர்பி-யில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் ஒரே சீரியல் இந்த ஆண்டு முழுவதும் டிஆர்பி-யில் பயங்க டஃப் கொடுத்திருக்கிறது.

ரோஜா:  2018 ஆம் ஆண்டு முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி, பின் 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் ரோஜா. இந்த சீரியலில் அர்ஜுன், ரோஜா கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலம். அதுவும் அர்ஜுன் மற்றும் ரோஜாவின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த ரோஜா ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கண்டுபிடித்து, ரோஜா சிறுவயதில் இழந்த அனைவரின் அன்பையும் அர்ஜுன் உதவியுடன் மீண்டும் பெறுகிறாள்.

ஒவ்வொரு முறையும் அனுவின் சூழ்ச்சியில் இருந்தும் தந்திரத்தில் இருந்தும் மீட்டு தன்னை யார் என்பதை நிலை நிறுத்திக் கொண்டார். பிறகு சதிகாரி சாக்க்ஷியிடம் இருந்து தனது குழந்தையை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீட்பதோடு ரோஜா தொடர் ஆனது நிறைவு பெற்றது. ரோஜா சீரியல் இந்த வருட டாப் 10 லிஸ்டில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: பிக்பாஸ் ஓட்டில் நடந்த குளறுபடி.. அநியாயமாக வெளியேறும் போட்டியாளர்

எதிர்நீச்சல்: சின்னத்திரையின் ஃபேமஸ் இயக்குனரான திருச்செல்வம் இயக்கத்தில் இந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் ஆனது 9.30மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் மதுமிதா, சபரி, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, சத்திய பிரியா, மாரிமுத்து, பம்பாய் ஞானம், பாரதி கண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆணாதிக்கத்தின் பிடியிலிருந்து வீட்டில் உள்ள பெண்களை சுதந்திரமாக வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் தனது உரிமைகளை அவர்களே நிலை நாட்ட வேண்டும் என்றும் ஜனனி அவர்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறாள். பெற்றோரின் ஆதரவையும் புகுந்த வீட்டின் ஆதரவையும் இழந்து அப்பத்தாவின் ஆதரவை மட்டும் நம்பி னது வாழ்க்கையில் இவற்றை ஒரு லட்சியமாக எடுத்துள்ளார்.

இப்பொழுது குடும்ப சொத்தில் 40 % பங்கு ஒரு பெண்ணின் கையிருக்கு சென்று விடக்கூடாது என்ற ஆணவத்தில் அதனை எவ்வாறெல்லாம் தடுக்கலாம் என்று போராடிக் கொண்டிருக்கிறார் குணசேகரன், அதிலிருந்து ஜனனி மீண்டு தனது லட்சியத்தை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதைப் போல கதை சென்று கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் ஆனது இந்த வருட டாப் 10 லிஸ்டில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. இது இந்த சீரியலுக்கான மாபெரும் வெற்றியாகும் .

பாக்யலட்சுமி: இல்லத்தரசிகளின் கடமைகளையும் அவர்கள் தலையில் சுமத்தப்படும் பொறுப்புகளையும் எடுத்துரைக்கும் வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் கதாநாயகி கச்சிதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதில் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்த பின், அதை சகித்துக் கொள்ளாமல் அவரை தூக்கி தூர எறிந்து விட்டு, குடும்பத்திற்காக தன்னையே மெழுகு ஆக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது பாக்கியலட்சுமியின் கணவர் கோபி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராதிகாவுடன் ஒரே தெருவில் இருந்து வெறுப்பேற்றுவதை எல்லாம் தாங்கிக்கொண்டு, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறா.ர் எனவே ஏகப்பட்ட சின்னத்திரை ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் பாக்கியலட்சுமி இந்த வருட டாப் 10 சீரியல்களின் லிஸ்டில் 4-வது இடத்தில் உள்ளார்.

Also Read: மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடும் பாக்கியலட்சுமியின் மருமகள்.. கலர் கலராய் வெளியான புகைப்படம்

வானத்தைப் போல: 2020 ஆம் ஆண்டு முதல் இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கத்தில் சன் என்டர்டைன்மென்ட் மற்றும் ஆரா கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள வானத்தைப்போல தொடரானது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும். துளசி தனது குழந்தை கருவிலேயே அழிந்ததை தனது கணவரிடமும் குடும்பத்தாரிடமும் மறைத்து சூழ்நிலை காரணமாக வெற்றியின் சூழ்ச்சியில் சிக்கியுள்ளார்.

அதிலிருந்து எப்படி மீண்டு வரப் போகிறார் என்று கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க சின்ராசு பொன்னின் சந்தியா இவர்கள் மூவர் இடையே நடக்கும் அட்ராசிட்டிகள் தான் சீரியலின் அல்டிமேட் இதில் சந்தியா ஜெயிப்பாரா அல்லது பொன்னி ஜெயிப்பாரா என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும். இந்த ஆண்டிற்கான சீரியலில் டாப் 10 லிஸ்டில் 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

சுந்தரி: இயக்குனர் அழகர் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டிலிருந்து சன் டிவியில் இரவு 7 மணிக்கு சுந்தரி சீரியல் ஆனது ஒளிபரப்பாகிறது. இதில் கேப்ரில்லா செல்லஸ், ஜிஷ்ணு மேனன் மற்றும் ஸ்ரீ கோபிகா, நீல நாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு பெண்ணிற்கு திருமண வாழ்க்கையானது சரியானதாக அமையவில்லை என்றால் எந்த சூழ்நிலையில் அதனை நினைத்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கி விடாமல் லட்சியத்திற்காகவும் தனது கனவிற்காகவும் தனி ஒரு பெண்ணாக இருந்து தனது சூழ்நிலைகளை வெளியில் செல்ல முடியாமலும் சுந்தரி தனது வெற்றிப் பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்.

சுந்தரிக்கு கார்த்திக் செய்த துரோகம் எப்பொழுது அனுவிற்க்கு தெரிய வரும் என்றும் சுந்தரி எப்பொழுது கலெக்டராக போகிறார் என்ற என்ற நோக்கிலும் கதை நகர்ந்து வருகிறது. இந்நிலையில் அருண் சுந்தரியை பழிவாங்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டிக் கொண்டு இருப்பது போலவும் அதிலிருந்து எவ்வாறு தங்களை காத்துக் கொள்ளப் போகிறார்கள் என்றும் பின்னர் வரும் தொடர்களில் காணலாம். தற்பொழுது சுந்தரி சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இந்த ஆண்டிற்கான டாப் 10 லிஸ்டில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: இனியாவை தும்சம் செய்யும் புத்தம் புது சீரியல்.. பாக்கியலட்சுமியை தொடர்ந்து விஜய் டிவி ரீமேக் செய்யும் சூப்பர் ஹிட் பெங்காலி தொடர்

கயல்: சீரியல் தினமும் சன் டிவியில் இரவு 7.30 ஒளிபரப்பாகிறது. இதனை சன் என்டர்டைன்மென்ட் மற்றும் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களில் இணைந்து தயாரிக்கின்றது. இதில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கயல் தனது குடும்பத்திற்கு எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் தனி ஒரு பெண்ணாக இருந்து வருகிறார்.

ஒரு பெண் அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் பல்வேறு இடங்களில் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு திறம்பட சமாளிக்க வேண்டும் என்பதை இத்தொடரின் மூலம் ஒரு விழிப்புணர்வாகவும் காட்டுகின்றனர். கயல் தனது பெரியப்பா குடும்பத்தின் சூழ்ச்சினாலும் வேலை செய்யும் இடத்தில் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் ஒரு புத்திசாலி பெண்ணாக இருந்து தன்னை மீட்டுக் கொள்கிறார்.

தனது சிறுவயது நட்பின் மூலம் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்க போகிறார் என்று இனி வரும் தொடர்களில் எதிர்பார்க்கலாம். அத்துடன் இந்த ஆண்டு முழுவதும் டாப் லிஸ்டில் தொடர்ந்து நீடித்த கயல் சீரியல்தான் 2022 ஆம் ஆண்டின் பெஸ்ட் சீரியல் என்று கூறப்படுவதுடன் இந்த லிஸ்டிங் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.

இதன் வரிசையில் இந்த வருட டாப் 10 சூப்பர் ஹிட் சீரியல்களின் லிஸ்டில் கண்ணான கண்ணே சீரியல் 7-வது இடத்திலும், ஆனந்த ராகம் சீரியல் 8-வது இடத்திலும், பாரதி கண்ணம்மா சீரியல் 9-வது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.

- Advertisement -

Trending News