வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த வாரம் டிஆர்பி-ஐ கலக்கிய டாப் 6 சீரியல்கள்.. எதிர்பாராத விதமாய் எதிர்நீச்சலுக்கு கிடைத்த 2வது இடம்

TRP Rating List: இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் எதிர்பாராத விதமாய் அதிரடி திருப்பம் நடந்துள்ளது. இதில் டாப் 6 இடத்தைப் பிடித்த சீரியல் அனைத்துமே ஒரே சேனல் சீரியல்கள் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. என்ன தான் விஜய் டிவி, ஜீ தமிழ் சன் டிவியுடன் முட்டி மோதினாலும் கடைசியில் மண்ணைக் கவ்வியது தான் மிச்சம்.

டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 6-வது இடத்தை சன் டிவியின் சுந்தரி சீரியல் பிடித்திருக்கிறது. சுந்தரி இப்பொழுது தான் தனக்கு மனசுக்கு பிடிச்ச ஒருத்தரோடு சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது மட்டுமல்லாமல், அவருடைய முன்னாள் கணவரும் உயிரோடு வந்து சுந்தரி முன்னாடி நிற்கிறார். இதையெல்லாம் தாண்டி எப்படி சுந்தரி தனக்கு பிடித்தவரை கல்யாணம் பண்ணுவார் என்பதால் புரியாத புதிராக இருக்கிறது.

5-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் உள்ளது. இதில் இனியா, விக்ரமின் தங்கையை காப்பாற்றுவதற்காக பெரிய ரிஸ்க் எடுத்து உண்மைகளை மறைத்து கல்யாணம் பண்ணி வைத்தார். தற்போது எல்லா விஷயமும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்தால், அனைத்து தவறுக்கும் இனியா தான் காரணம் என்று இனியாவையும் விக்ரமையும் வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள்.

4-வது இடத்தில் சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இருக்கிறது. அண்ணன், தங்கை பாசத்திற்கு நடுவில் மாட்டிக் கொண்டு ஒவ்வொருவரும் படாத பாடுபட்டு வருகிறார்கள். இதில் பலிகெடாவது பொன்னி தான். எப்படியாவது தன்னுடைய கணவர் தன் மீது மட்டும் பாசத்துடன் இருக்க வேண்டும் என்று, பல தில்லாலங்கடி வேலையை பார்த்து வந்தார். தற்போது அதற்கு ஏற்ற மாதிரி துளசியிடம், ‘உங்க அண்ணன் கூட வாழ வேண்டும் என்றால், அவரை விட்டு விலக வேண்டும் ‘என்று ஒரு டீல் பேசி வருகிறார்.

Also Read: மனோஜை தன் பக்கம் இழுக்க ரோகிணி செய்த தில்லாலங்கடி வேலை.. மீனாவுக்கு எதிராக பிளான் பண்ணும் விஜயா

டாப் 6 சீரியல்கள் லிஸ்ட்

இந்த வாரம் இரண்டு சீரியல்கள் ஒரே டிஆர்பி ரேட்டிங்கில் இருப்பதால் மூன்று மற்றும் இரண்டாவது இடம் சன் டிவியின் எதிர்நீச்சல் மற்றும் கயல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. எதிர்நீச்சல் சீரியலில் எல்லா திருட்டுத்தனத்தையும் செய்துவிட்டு அனைத்து பழியையும் ஜீவானந்தம் மீது போட்டு வக்ர புத்தியுடன் குணசேகரன் இருக்கிறார். ஜீவானந்தம் தர்ஷினியை காப்பாற்றிய பிறகும் போலீசார் இவர்தான் தர்ஷினியை கடத்தி இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு, அவரைப் பார்த்ததும் சூட் பண்ணுவதற்கு ஆர்டர் வாங்கிக்கொண்டு தேடி வருகிறார்கள்.

மேலும் கயல் சீரியலில் இதுவரை எழில் மட்டுமே, மனசுல காதலை சுமந்து கொண்டு கயல் பின்னாடியே அலைந்து வந்தார். அதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இருந்த கயலுக்கு தற்போது காதல் பூத்து விட்டது. ஆனால் எழில் அம்மா செய்த சதியால் அவரை விட்டு விலக ஆரம்பித்தார் எழில். தற்போது எல்லாம் கூடி வரும் விதமாக கதை சுவாரசியமாக நகர்ந்து வருகிறது.

முதல் இடத்தை சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்து மாஸ் காட்டிவிட்டது. இந்த ஒரு தருணத்திற்காக தான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஏற்ற மாதிரி தற்போது அன்புவே ஆனந்தி புரிந்து கொண்டார். இப்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு சுமுகமான உறவு ஏற்பட ஆரம்பித்துவிட்டது. இதுவே காதலாக மாறி கைகூடினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.

Also Read: குணசேகரன் விரித்த வலையில் சிக்கிய ஜீவானந்தம்.. ஒரு வழியா தர்ஷினி கடத்தலுக்கு முடிவு கட்டிய எதிர்நீச்சல்

- Advertisement -

Trending News