Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை காணும் என்று குணசேகரன் அனைத்து பக்கங்களிலும் சல்லடை போட்டுக்கொண்டு தேடி வருகிறார். ஒருவேளை ஜனனி வீட்டில் இருப்பாரோ என்று நினைத்து ஞானத்தை வீட்டிற்குள் போய் பார்க்க சொல்கிறார். அங்கேயும் இல்லாததால் அங்கு இருக்கும் மருமகளிடம் கோபத்தை காட்டுகிறார். ஆனால் இவருக்கு பதில் அளிக்கும் விதமாக ரேணுகா வார்த்தையால் கிழித்து தொங்க விடுகிறார்.
பிறகு அப்பத்தாவை தேடுவதற்கு குணசேகரன் கிளம்பி விடுகிறார். அந்த நேரத்தில் ஜனனியும் அப்பத்தாவை தேடுவதற்கு போய்விடுகிறார். பிறகு அப்பத்தா நீதிபதி வீட்டில் இருந்து பட்டம்மாள் யார் எப்படிப்பட்டவர் என்பதையும், அவருடைய ஷேர் விஷயத்தையும் நீதிபதியிடம் சொல்கிறார். குணசேகரன் படிப்படியாக உயர ஆரம்பித்ததும் அவருடன் சேர்ந்து ஆணாதிக்க திமிரும் வந்துவிட்டது.
Also read: திடீரென படுத்த படுக்கையான சக்தி.. உடைந்து போகும் ஜனனி, எதிர்நீச்சல் அதிரடி ட்விஸ்ட்
அதன் வழியாக படித்த பெண்களை கல்யாணம் பண்ணி அடுப்பாங்கரையில் வேலை பார்க்கும் அடிமைகளாக அடக்கிக் கொண்டு வருகிறார். இப்படி அவர் செய்த அநியாயங்கள் அனைத்தையும் அப்பத்தா சொல்கிறார். அந்த நேரத்தில் ஜனனி மற்றும் ஜீவானந்தம் நீதிபதி வீட்டிற்கு போகிறார்கள். பின்பு அப்பத்தா இவர்கள் இரண்டு பேரும் தான் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்று சொல்லி குணசேகருக்கு எதிராக புகார் கொடுத்து விடுகிறார்.
பிறகு வெளியே வந்ததும் குணசேகரன் இவர்களை பார்த்து அப்பத்தாவை வழக்கம் போல் வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக பேசுகிறார். நான் அழியறதுக்கு முன்னாடி உங்கள் எல்லாத்தையும் அழித்துவிட்டு தான் போவேன் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார். உடனே அப்பத்தா உன்னால ஒன்னும் பண்ண முடியாது அதற்கு எல்லா வேலைகளையும் நான் செய்து விட்டேன்.
மேலும் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு யார் காரணம் என்பதை கூடிய விரைவில் வெட்ட வெளிச்சம் ஆகும், எல்லாத்திற்கும் தயாராக இரு என்று வார்னிங் கொடுக்கிறார். அதற்கு குணசேகரன் தெனாவட்டாக ஜீவானந்திடம் வாய் தொடுக்காக பேசுகிறார். பிறகு அப்பத்தா மற்றும் ஜனனி இவர்கள் இருவரும் பாசத்தை கொட்டி அரவணைத்துக் கொள்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜனனியை போக சொல்லிட்டு அப்பத்தா ஜீவானந்தம் கூட காரில் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார். இதையெல்லாம் பார்த்த குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் செல்லா காசாக நிற்கிறார். இனி இவர் ஆசைப்பட்ட மாதிரி அந்த 40% ஷேர் கிடைக்காது. வேண்டுமென்றால் வீட்டிற்கு போய் மருமகளிடம் ஒரு கிளாஸ் மோரை மட்டும் குடிச்சிட்டு குப்புறப் படுத்து தூங்கப் போகிறார்.
Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!