இந்தியன் 2 டிக்கெட் கிடைக்கலையா.? ஒடிடி பக்கம் வாங்க, இந்த வாரம் வெளியாகும் 10 படங்கள்

This Week OTT Release: ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 நாளை உலக அளவில் வெளியாக இருக்கிறது. ஏழு ஆண்டுகளாக பல்வேறு தடைகளை கடந்து தற்போது ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கும் இப்படம் டிக்கெட் முன்பதிவில் பல சாதனைகளை படைத்துள்ளது.

இதனால் முதல் 3 நாட்கள் பல இடங்களில் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாக இருக்கிறது. அனைத்துமே கமலின் தீவிர ரசிகர்களால் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. இதனால் டிக்கெட் கிடைக்கவில்லையே என பலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி டிக்கெட் கிடைக்காதவர்கள் கவலைப்படாமல் இந்த வார இறுதியை ஓடிடியில் வெளியாகும் படங்கள் மூலம் என்ஜாய் செய்யலாம். அந்த வகையில் நாளை விஜய் சேதுபதியின் மகாராஜா நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்

ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் வெளியான ஹிட்லிஸ்ட் கடந்த 9ம் தேதி ஆகா தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக உறியடி விஜயகுமார் நடிப்பில் வெளியான எலக்சன் படத்தை தற்போது அமேசான் பிரைம் தளத்தில் கண்டு களிக்கலாம்.

இதைத்தொடர்ந்து சஸ்பென்ஸ் திரில்லர் படமான பகலறியான் ஆகா தமிழில் நாளை வெளியாகிறது. மேலும் ஹராம் ஹரா, ஆரம்பம் ஆகிய தெலுங்கு படங்களும் ஆகா தமிழ் தளத்தில் நாளை வெளியாகிறது.

அடுத்ததாக தெலுங்கு படமான பிளாட் இடிவி வின் தளத்தில் நாளை வெளியாகிறது. மலையாளத்தை பொருத்தவரையில் மந்தாகினி மனோரமா மேக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.

மேலும் 36 days திரில்லர் ஹிந்தி வெப் சீரிஸ் சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் தெலுங்கு வெப் தொடரான அக்னிசாட்சி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. பில் ஹிந்தி வெப் சீரிஸ் நாளை ஜியோ சினிமாவில் வெளியாகிறது. இப்படியாக இந்த வார இறுதியை உங்களுக்கு பிடித்த படங்களுடன் கொண்டாடுங்கள்.

இந்த வாரம் டிஜிட்டலில் வெளியாகும் படங்கள்

Next Story

- Advertisement -