இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 5 படங்கள்.. ஏழு வருட போராட்டத்திற்கு பின் வரும் இந்தியன் 2

This Week Theater OTT Release: கடந்த வாரம் தியேட்டரில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை அடுத்து இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் எந்தெந்த படங்கள் வெளிவருகிறது என காண்போம்.

அதில் தியேட்டர் ரிலீஸ் பொருத்தவரை இரு படங்கள் தான் வெளியாகிறது. அதில் ரசிகர்களின் ஏழு வருட காத்திருப்பின் பலனாக கமல், சங்கர் கூட்டணியின் இந்தியன் 2 ஜூலை 12ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இதன் ட்ரெய்லரில் கமலின் பல கெட்டப்புகள் ரசிகர்களை கவர்ந்தது. அதைத்தொடர்ந்து படத்திற்கான பிரமோஷனும் ஜோராக நடந்து வருகிறது. இதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் சேனாபதி பிரம்மாண்ட வசூலை பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் கமலுக்கு போட்டியாக பார்த்திபனின் டீன்ஸ் படமும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரு சில பஞ்சாயத்துகள் நடந்தாலும் படம் இப்போது ரிலீஸ்க்கு தயார் நிலையில் இருக்கிறது.

டிஜிட்டலுக்கு வரும் மகாராஜா

இதையடுத்து டிஜிட்டலை பொறுத்தவரையில் மூன்று படங்கள் வெளி வருகிறது. அதில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மகாராஜா வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 12ஆம் தேதி நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

வெளியான சில வாரங்களிலேயே 100 கோடி வசூலை வாரிசுருட்டிய இப்படம் டிஜிட்டலிலும் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து சரத்குமார், கௌதம் மேனன், விஜய் கனிஷ்கா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த ஹிட் லிஸ்ட் ஜூலை 9ஆம் தேதி ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகிறது.

அடுத்ததாக சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் உருவாகி இருக்கும் நாகேந்திரனின் தேன்நிலவு வெப் தொடர் ஜூலை 19ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. அதேபோல் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் சட்னி சாம்பார் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனாலயே இதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படியாக இந்த வார இறுதியை இந்த ஐந்து படங்களும் கலக்க இருக்கிறது.

இந்த வாரம் தியேட்டர் ஓடிடியில் வெளிவரும் படங்கள்

Next Story

- Advertisement -