திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஆதிரை தலையில் இடியை இறக்கிய கரிகாலன்.. ஈஸ்வரிக்காக எதையும் செய்யத் துணிந்த ஜீவானந்தம்

Ethirneechal Promo: சன் டிவியின் பரபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாகவும், கண்கலங்க வைப்பதாகவும், பல சந்தேகமான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாகவும் அமைந்திருக்கிறது. இதனால் இன்றைய எபிசோடு மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கரிகாலன் மற்றும் ஜான்சிராணியிடம் இன்று மாலைக்குள் நான் என் முடிவை சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆதிரை, அருணை பார்க்க சென்று இருந்தார். அருண், ஆதிரையை நேருக்கு நேராய் பார்த்த்தும் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அதிரை அங்கேயே கதறி அழுகிறார் இருந்தாலும் அருணின் மனது மாறுவதாய் இல்லை.

Also Read:ஊத்தி மூடப்பட்ட பாரதிகண்ணம்மா.. பிக்பாஸிடம் சரணடைந்த நடிகை

இதனால் வீட்டிற்கு கோபத்தோடும், அழுகையோடும் வரும் ஆதிரை தன் கையில் இருந்த பையை தூக்கி எறிகிறார். அதே நேரத்தில் கரிகாலன், ஆதிரையின் முடிவுக்காக அவரை கேட்கும் பொழுது, அருண் ஆதிரையிடம் சொன்ன அதே பதிலை, ஆதிரை கரிகாலனிடம் நீ எனக்கு வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்.

அப்போது கரிகாலன் கலங்கிய கண்களோடு இந்த வீட்டில் எல்லோரும் என்னை காமெடியனாக பார்க்கிறீர்கள், ஆனால் எனக்குள்ளும் ஒரு மனசு இருக்கிறது என சொல்கிறார். இதைக் கேட்டு ஜான்சி ராணி மௌனமாக அழுகிறார். விசாலாட்சிக்கும் கரிகாலன் பேசியதை கேட்டு மனசு மாறுவது போலவும், ஆதிரையை சமாதானப்படுத்துவது போலவும் காட்டப்படுகிறது.

Also Read:ஒரே வருடத்தில் கணவனை இழந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை.. மரண பயத்தை காட்டிய காரணம்

அதே நேரத்தில் ஈஸ்வரி, ஜீவானந்தத்திற்கு போன் செய்கிறார். நான் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி பேசுகிறேன் என்று சொல்லுகிறார். அதற்கு ஜீவானந்தம், நீங்கள் குணசேகரனின் மனைவி என்பதால் நான் பேசவில்லை, ஈஸ்வரி என்பதால் மட்டுமே பேசுகிறேன் என்று பதில் சொல்கிறார். ஜீவானந்தத்தின் குரலை கேட்டதும் ஈஸ்வரியின் முகம் மாறுகிறது.

இவ்வளவு நாள் யார் இந்த ஜீவானந்தம், எதற்காக இப்படி செய்கிறார் என மக்களுக்கு பல கேள்விகள் இருந்தது. இந்த கேள்விகளுக்கான பதில் ஈஸ்வரியின் மூலம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆதிரையை அருண் வேண்டாம் என்று சொன்னதால், இனி அவர் என்ன முடிவு எடுப்பார், கரிகாலனின் காதலை ஏற்றுக் கொள்வாரா என்பதும் கேள்வியாக இருக்கிறது.

Also Read:நடிகர்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.. அடேங்கப்பா ஆணாதிக்கத்திற்கு ஜாஸ்தி தான்

- Advertisement -

Trending News