ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

உனக்கு இதெல்லாம் தேவைதான் கோபி.. சக்காளத்தி சண்டையில் வசமாக சிக்கிக் கொண்ட மன்மதன்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டு மனைவிகளான பாக்யா மற்றும் ராதிகா இருவருக்கு இடையில் சக்காளத்தி சண்டை முற்றி இருக்கிறது. அதிலும் பாக்யா, தற்போது ஓவர் திமிரு காட்டும் ராதிகாவை வறுத்தெடுக்கிறார்.

ஏனென்றால் கேண்டீன் டென்டரை வாங்க விடக்கூடாது என பல சதி திட்டத்தை தீட்டிய ராதிகாவின் மூக்கை உடைத்து, அந்த டெண்டரை பாக்யா கைப்பற்றி உள்ளார். இது எப்படி சாத்தியமானது என ராதிகா தலையை பிச்சுக்கிட்டு இருக்கிறார். இது தெரியாத கோபி, ராதிகாவிடமே என்ன நடந்தது என்பதை கேட்கிறார்.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

உடனே ராதிகா தன்னுடைய அலுவலகத்தின் கேண்டீன் ஆர்டரை பாக்யா தான் எடுத்திருக்கிறார் என சொல்கிறார். இந்த விஷயம் கோபிக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு பக்கம் பாக்யாவிற்கு இந்த டெண்டர் கிடைத்திருப்பதால் கோபிக்கு சந்தோசம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் ராதிகாவிற்கு சுர்ருன்னு ஏறிடுச்சு.

முதலில் கோபிக்கு காபி போட்டு கொண்டு வருகிறேன் என சொன்ன ராதிகா, இப்போது ஸ்ட்ராங்கா போய் காபி போட்டு கொண்டு வா கோபி என்று விரட்டுகிறார். முன்பு பாக்யாவை வீட்டு வேலைக்காரியை விட கேவலமாக நடத்திய கோபிக்கு இப்போது ராதிகா சரியாக பாடம் புகட்டுகிறார்.

Also Read: பட வாய்ப்பு இல்லாததால் விஜய் டிவியில் தஞ்சமடைந்த நடிகை.. டோட்டல் கவர்ச்சியும் வேஸ்டா போச்சே

இனி போகிற போக்கை பார்த்தால் கோபி சமையலறையில் மாவாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதையெல்லாம் பார்க்கும் சின்னத்திரை ரசிகர்கள் ‘கிளி போல பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு போல ஐட்டம் நடிகை கேக்குது’ கோபிக்கு தேவைதான் என்று வசை பாடுகின்றனர்.

இனிமேல் தான் ராதிகா மற்றும் பாக்யா இருவருக்கு இடையே நடக்கும் சக்காளத்தி சண்டையில் மன்மதனான கோபி மாட்டிக்கொண்டு முழிக்கும் கண்கொள்ளாக் காட்சி எல்லாம், பாக்கியலட்சுமி சீரியலில் அரங்கேற போகிறது.

Also Read: ஓவர் கெத்து காட்டி அலப்பறை செய்த டிவி பிரபலம்.. சர்வமும் அடங்கி போன சோகம்

- Advertisement -

Trending News