ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெயிலர் வசூலை முறியடிக்குமா லியோ.? படத்தைப் பார்த்த தளபதியின் ரியாக்சன் இதுதான்

Leo-Vijay: சோசியல் மீடியாவை திறந்தாலே லியோ பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. ஏற்கனவே ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்த இப்படம் அடுத்தடுத்த போஸ்டர்கள் மூலம் திரையுலகை மிரள விட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் ஜெயிலர் பட வசூலை லியோ முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு தான் சினிமா விமர்சகர்கள் மத்தியில் இருக்கிறது. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான பிரச்சனையில் விஜய் பெயர் எந்த அளவுக்கு டேமேஜ் ஆனது என்று அனைவருக்கும் தெரியும்.

Also read: எப்படியாச்சும் ஜெயிலர் பட வசூலை முந்திடனும்.. விக்ரமிடம் மண்டியிட்டு லியோ பட குழு செய்த நரி தந்திரம்

அதை தொடர்ந்து ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கதையும் விமர்சனத்திற்கு ஆளானது. அதனாலேயே இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் எந்த இடத்தை பிடிக்கும் என்ற ஆர்வமும் எழத் தொடங்கியது.

அதில் ஜெயிலர் 650 கோடி வரை வசூலித்த நிலையில் லியோ ஆயிரம் கோடியை நெருங்கிவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார் போல் ஃப்ரீ பிசினஸ் வியாபாரமும் சக்கை போடு போட்ட நிலையில் தற்போது படமும் எதிர்பார்த்ததை விட அசத்தலாக வந்திருக்கிறதாம்.

Also read: சஞ்சய் தத் கழுத்தை ஆக்ரோஷமாக பிடித்த விஜய்.. டெவிலை சந்தித்த லியோ போஸ்டர்

சமீபத்தில் தயாரிப்பாளர் லலித் இது குறித்து மேடையிலேயே வெளிப்படையாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து இப்போது விஜய் மொத்த படத்தையும் பார்த்து விட்டு சந்தோஷத்தில் பூரித்து விட்டாராம். லோகேஷ் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறி ஆர்ப்பரித்திருக்கிறார்.

ஆக மொத்தம் கடந்த வருடம் விக்ரம் மூலம் சர்வதேச அளவில் மிரட்டி விட்ட லோகேஷ் இந்த வருடம் லியோ மூலம் அந்த சாதனையை முறியடிக்க இருக்கிறார். பட ரிலீசுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் செகண்ட் சிங்கிள், இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்த சம்பவங்களும் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

- Advertisement -

Trending News