ஈகோவை தூண்டிவிட்ட மாமியார்.. ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்திற்கு பின் இப்படி ஒரு காரணமா.?

Jayam Ravi: சில மாதங்களுக்கு முன்னர் ஜி வி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பியது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளின் பிரிவு இப்போதும் கூட வருத்தத்தை கொடுக்கிறது.

அந்த சூடு குறையும் முன்பே ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி படுவேகமாக பரவி வருகிறது. முதலில் இது சாதாரண கிசுகிசுவாக தான் இருக்கும் என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் சோசியல் மீடியாவில் இது பெரும் பேசு பொருளாக மாறிய நிலையில் சம்பந்தப்பட்டவர்களின் விளக்கமும் இதுவரை வரவில்லை. அதற்கு ஏற்றார் போல் ஆர்த்தி, ஜெயம் ரவியுடன் இருக்கும் அத்தனை போட்டோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெலிட் செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் இவர்களின் விவாகரத்துக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது ஆர்த்தியின் அம்மா சுஜாதா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது அனைவரும் அறிந்த கதை தான்.

ஜெயம் ரவியின் விவாகரத்து

அவருடைய தயாரிப்பில் ஜெயம் ரவி பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவருடைய தயாரிப்பில் நடிக்க ஜெயம் ரவி 25 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இது பிரச்சனையாக மாறி தற்போது குடும்பத்தில் விரிசல் விழுந்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

அதேபோல் சுஜாதாவுக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் இருப்பதாகவும் அவருடைய பொறுப்பில் தான் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் சபிதா ஜோசப் கூறியுள்ளார். அவர் சொல்வதை ஜெயம் ரவி கேட்க வேண்டும் என அவருடைய மாமியார் கூறி இருக்கிறார்.

இதுதான் பிரச்சனைக்கான காரணம். இதனால் ஜெயம் ரவியின் ஈகோ தூண்டப்பட்டு ஆர்த்திக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கிறது. அது பெரிதாகவே தற்போது விவாகரத்து முடிவை இருவரும் எடுத்துள்ளதாக பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இப்படி பல யூகங்கள் ஜெயம் ரவியின் விவாகரத்து பற்றி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்று விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறுகின்றனர்.

மனைவியை பிரிய தயாராகும் ஜெயம் ரவி

Next Story

- Advertisement -