ஜெயம் ரவி நிலைமையை நம்பி அவ்வளவு கோடிகள் போட முடியாது.. ஏஜிஎஸ் போட்ட முட்டுக்கட்டை

தொடர் தோல்விகளால் சினிமாவில் ஜெயம் ரவி கேரியரே கேள்விக்குறியாகி வருகிறது. இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இவர் பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை. கடைசியாக, அதுவும் ஒன்று, இரண்டு ஹீரோக்களுடன் இணைந்து நடித்த படம் மட்டும் தான் அவருக்கு ஹிட்.

2019 பிரதீப் ரங்கநாதனின் கோமாளி படத்திற்கு அப்புறம் சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு ஹிட்டும் இவருக்கு அமையவில்லை. பொன்னியின் செல்வன் மட்டும் ஹிட்டானது, அதுவும் ஜெயம் ரவி மட்டுமே அந்த படத்தில் நடிக்கவில்லை அதனால் அது தனிப்பட்ட ஹிட் என்று சொல்ல முடியாது. மணிரத்தினத்தின் தக் லைப் படத்திலிருந்தும் வெளியேறி விட்டார்.

ஏஜிஎஸ் போட்ட முட்டுக்கட்டை

அடுத்தடுத்த தோல்விகளால் மார்க்கெட்டில் ஜெயம் ரவியின் படம் பிசினஸ் ஆவதில்லை. அதனால் இவரை நம்பி பெரிய பட்ஜெட்கள் படம் எடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில் தான் ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். தோல்வியால் துவண்டு போன ஜெயம்ரவி-யின் கடைசி 4 படங்கள்,

பூமி
சைரன்
அகிலன்
இறைவன்

ஜெயம் ரவி, மோகன் ராஜா காமினேஷனில் உருவான படம் தனி ஒருவன். இப்பொழுது இந்த படத்தில் இரண்டாம் பாகம் எடுக்க கதை ரெடி பண்ணிவிட்டார் மோகன் ராஜா. இந்த படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் மோகன் ராஜா போட்ட பட்ஜெட்டால் இப்பொழுது பின்வாங்கியுள்ளது ஏஜிஎஸ். ஜெயம் ரவி-யுடன் ஏஜிஎஸ் கூட்டணி போட்ட 3 படங்கள்,

Santhosh Subramaniam (2008)
Thani Oruvan (2015)
Aadhi Bhagavan (2013)

தனி ஒருவன் 2 படத்தை எப்படியாவது 2024 ஆம் ஆண்டுக்குள் முடித்து விடுங்கள் என ஏஜிஎஸ், மோகன் ராஜாவிடம் கூறியது. மோகன் ராஜாவும் இந்த படத்திற்கு 150 கோடிகள் பட்ஜெட் பேசியுள்ளார். ஜெயம் ரவி நிலைமைக்கு இப்போது எல்லாம் அவ்வளவு காசுகள் போட முடியாது. 70 கோடி தான் கொடுக்க முடியும் என முட்டுக்கட்டை போட்டுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.

ஜெயம் ரவியை சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்

- Advertisement -