வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் இந்த ஹீரோவா.! அட இவரும் முத்தத்துக்கு பேமஸ் ஆச்சே

Biggboss 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடையே வெகு பிரபலம். அதில் டிஆர்பியில் பட்டையை கிளப்பும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி விட்டாலே போட்டி சேனல்கள் எல்லாம் தடுமாற ஆரம்பித்து விடும்.

கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த கமல் தற்போது அதிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதை அடுத்து அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்விதான் இப்போது அதிகமாக இருக்கிறது.

இதில் நெட்டிசன்கள் ஆளாளுக்கு ஒரு பெயரைச் சொல்லி வைரல் செய்து வருகின்றனர். அதில் சூர்யா, பிரகாஷ்ராஜ், சிம்பு, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் சுற்றி சுற்றி வந்து ஒரு குழப்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் அதெல்லாம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போகும் நடிகரை தரப்பு தற்போது முடிவு செய்து விட்டது. இதற்கான ஒப்பந்தமும் தற்போது கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஆண்டவர் இடத்தை நிரப்ப வரும் விஜய் சேதுபதி

அந்த வகையில் மக்கள் நாயகன் எதார்த்த நாயகன் என கொண்டாடப்படும் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் ஆவார். இது ஒரு பக்கம் எதிர்பார்த்தது தான் என்றாலும் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விஜய் டிவி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட இருக்கிறது. மேலும் ப்ரோமோ சூட் நடந்து வரும் நிலையில் இனி விஜய் டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அந்த வகையில் அக்டோபர் மாத முதல் வாரத்தில் சீசன் 8 கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஜோயா அவருடைய பாய் ப்ரெண்ட் டிடிஎஃப் வாசன் உட்பட இன்னும் சில பிரபலங்களும் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

அதை படு ரகசியமாக வைத்திருக்கும் விஜய் டிவி சோஷியல் மீடியா மூலம் சர்ச்சைக்கு ஆளான பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டவரைப் போல முத்தத்திற்கு பெயர் போன விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நிச்சயம் சுவாரஸ்யமாக மாற்றி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாகலமாக தொடங்க போகும் பிக்பாஸ் சீசன் 8

- Advertisement -

Trending News