பிக் பாஸ் சீசன் 6 கடைசி 5 பைனலிஸ்ட் இவர்கள் தான்.. இப்பவும் தில்லாலங்கடி வேலையை கையாளும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 20 பேர் கொண்ட தொடங்கப்பட்டது. இதில் வையல் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்தார். இதில் முதல் வாரம் சாந்தி மற்றும் ஜிபி முத்து இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வார நாமினேஷனில் அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறி உள்ளனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க்கள் கடினமாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கடைசி வாரம் வரையில் யார் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

Also Read : நான் உன்ன தங்கச்சினு நினைச்சேன் அவமானப்படுத்திட்ட.. ஜனனியால் ரணகளமான பிக்பாஸ் வீடு

இந்நிலையில் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் விஜய் டிவியைச் சேர்ந்த ராஜு, பிரியங்கா ஆகியோரை பைனல் லிஸ்ட்டாக தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால் இவர்கள் இருவருமே விஜய் டிவியை சேர்ந்தவர்கள் தான். இதில் முதலிடத்தை ராஜுவும், இரண்டாவது இடத்தை பிரியங்காவும் பெற்றிருந்தனர்.

இப்பவும் அதே தில்லாலங்கடி வேலையை தான் விஜய் டிவி செய்ய உள்ளது. அதாவது விக்ரமன், தனலட்சுமி, சிவின், அமுதவாணன் மற்றும் மைனா நந்தினி ஆகியோர் பைனல் லிஸ்ட்டாக செல்ல உள்ளனர். இதை ஏற்கனவே விஜய் டிவி தீர்மானம் செய்து வைத்துள்ளது.

Also Read : அவனா டா நீ! பலான கேசில் மாட்டிய விக்ரமன்.. நம்பவே முடியல ஊருக்கு தான் உபதேசமா?

இதில் தனலட்சுமி எல்லாருடனும் சண்டையிட்டு வருவதால் அவரால் டிஆர்பி எகிறுகிறது. இதைத் தொடர்ந்து சிவினுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது. மற்ற மூவருமே விஜய் டிவியைச் சார்ந்தவர்கள் தான். விக்ரமன் விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் நடித்துள்ளார்.

அமுதவாணன் மற்றும் மைனா இருவருமே விஜய் டிவியை சேர்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆகையால் இவர்கள் ஐந்து பேரும் பிக் பாஸ் வீட்டின் இறுதி நாட்கள் வரை செல்ல உள்ளனர். மேலும் இதில் டைட்டில் வின்னராக விஜய் டிவியை சேர்ந்த ஒருவராகத்தான் இருப்பார்.

Also Read : கோபியின் மகனுக்காக அடுத்து நடக்கும் சக்களத்தி சண்டை.. மானங்கெட்ட சீரியலா இருக்குதே!

Next Story

- Advertisement -