அக்டோபர் மாதத்தை குறி வைத்த 2 படங்கள்.. வேட்டையனுக்கு ஆட்டம் காட்ட வரும் சிறுத்தை

Rajini: இந்த வருட தொடக்கத்தின் முதல் பாதி கோலிவுட்டை பொருத்தவரையில் கொஞ்சம் டல் அடித்தது. அதையடுத்து இரண்டாம் பாதி டாப் ஹீரோக்களின் படங்களால் கலை கட்ட ஆரம்பித்து விட்டது.

அதன் தொடக்கமாக ஜூலை 12ஆம் தேதி கமல், சங்கர் கூட்டணியில் ஏழு வருட காத்திருப்பின் பலனாக இந்தியன் 2 வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து 26 ஆம் தேதி தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகி இருக்கும் ராயன் ரிலீஸ் ஆகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் இயக்குனரும் தனுஷ் தான் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு அடுத்ததாக வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள கோட் செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

இதே மாதத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக அக்டோபர் மாதம் பண்டிகை கால மாதமாகும். அதில் ஆயுத பூஜையை முன்னிட்டு பத்தாம் தேதி சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

ரஜினியுடன் மோதும் சூர்யா

அதனாலேயே அன்றைய தேதியில் வேறு யாரும் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முன்வரவில்லை. பொதுவாக ரஜினி படம் வெளியாகிறது என்றாலே அடுத்த பத்து நாளுக்கு எந்த படமும் வெளியாகாது.

ஆனால் இப்போது பார்த்தால் சூர்யாவின் கங்குவா அதே தேதியில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இது பலருக்கும் அதிர்ச்சி கலந்த புதிய தகவலாக உள்ளது.

அதேபோல் தீபாவளியை முன்னிட்டு விடாமுயற்சி எப்படியும் வெளிவந்து விடும் என கூறுகின்றனர். ஆக மொத்தம் சூப்பர் ஸ்டார் சிங்கம் போல் சிங்கிளாக அக்டோபர் மாதத்தை கண்ட்ரோல் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தார்

அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் கங்குவா, விடாமுயற்சி போன்ற படங்கள் வெளியாகிறது. இதனால் இப்படங்களின் வசூலில் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் இருக்கிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

அக்டோபர் மாதத்தை குறி வைக்கும் பிரம்மாண்ட படங்கள்

Next Story

- Advertisement -