காட் பிளஸ் யூ மாமே.. வெறித்தனமான லுக்கில் வெளிவந்த குட் பேட் அக்லி செகண்ட் லுக் போஸ்டர்

Good Bad Ugly: அஜித் நடிப்பில் விடாமுயற்சி ஆரம்பித்து வருட கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் படம் எப்போது வெளிவரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அவ்வப்போது பிரேக் எடுத்திருந்த பட குழு தற்போது மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர்.

ajith-good bad ugly
ajith-good bad ugly

இதற்கு இடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லியில் அஜித் நடிக்க ஆரம்பித்தார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படு மிரட்டலாக இருந்தது. அஜித் மூன்று தோற்றத்தில் இருக்கும் அந்த போஸ்டர் ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தார்.

அதேபோல் அந்த போஸ்டரில் அவர் நடு விரலை காட்டியபடி இருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது இரண்டாம் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.

அதில் காட் பிளஸ் யூ மாமே என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அஜித் சிறை கைதி போல் உடை அணிந்து இருக்கிறார். அதில் 63 என்ற நம்பரும் இருக்கிறது. அத்துடன் கழுத்தில் ரெட் கலர் கர்சீப், கூலிங் கிளாஸ் என மிரட்டல் லுக்கில் இருக்கிறார்.

மிரட்டல் லுக்கில் அசத்தும் அஜித்

மேலும் அவருடைய கையில் பாம்பு டாட்டூவும் இருக்கிறது. அதேபோல் அவரை சுற்றி விதவிதமான துப்பாக்கிகள் இருக்கிறது. இப்படி மாஸாக வெளிவந்திருக்கும் இந்த போஸ்டரை பார்க்கும்போது படத்தில் ஆக்சன் காட்சிகள் படு பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது.

அடுத்த வருட பொங்கலை முன்னிட்டு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படம் இந்த இரண்டு போஸ்டர்களிலேயே பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. இதற்கு மற்றொரு காரணம் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் தான்.

அது மட்டும் இன்றி இந்த போஸ்டரின் ஸ்டைலை பார்க்கும்போது லோகேஷ் பட சாயலும் நினைவுக்கு வருகிறது. ஆக மொத்தம் அவருக்கு போட்டியாக ஆதித் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஏதோ ஒன்று புதிதாக செய்யப் போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

குட் பேட் அட்லி செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பட குழு

Next Story

- Advertisement -