கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு பக்கம் ராதிகா என்ன தான் கோபியை டார்ச்சர் செய்தாலும் அதையெல்லாம் மறந்து தற்போது அவருடைய குடும்பத்துடன் ஒட்டனும் என்று ஆசைப்படுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக இவருடைய மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆனால் பாக்கியா இவர் செஞ்சது எல்லாத்தையும் மறந்து போய் உடனே கோபி வந்ததும் சேர்ந்துகிடுவாங்களா என்ன. தற்போது தான் பாக்கியா சுதந்திரமாகவும், நினைத்த காரியத்தை செய்து சந்தோஷமாகவும் வாழ்க்கையே என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார். அத்துடன் இப்பொழுதுதான் ஒரு மனுசியாகவே வாழ ஆரம்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

Also read: உருப்படியான விஷயம் செய்யும் ஜனனி.. குணசேகரனின் கனவு கோட்டை 40% ஷேர் க்ளோஸ்

மேலும் பாக்கியா இவருடைய மகன் மருமகளுடன் சேர்ந்து சந்தோஷமாக டைனிங் டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த கோபி மிகவும் ஏக்கத்துடன் பார்த்துட்டு இருக்க பிறகு இது என்னுடைய குடும்பம். நான் ஏன் அப்படி ஒளிந்து இருந்து பார்க்க வேண்டும் நானும் ஜாயின் பண்ணிக்கிறேன் என்று அவங்களுடன் சேர்ந்து உட்காருகிறார்.

அப்பொழுது கோபி,  என்ன ஜோக் என்று சொன்னால் நானும் உங்களுடன் சேர்ந்து சிரித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை பார்த்த எழில் அவரை நக்கல் செய்யும் விதமாக ராதிகா பின்னாடி வராங்க என்று சொல்ல உடனே கோபி அல்டிமேட் ஒரு ரியாக்ஷன் கலந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்.

Also read: பாசமலையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

ரொம்பவே பதறிப்போய் நான் காபி குடிக்கவில்லை, நான் எதுவுமே பண்ணல என்று ஜோக்கர் மாதிரி ஆட்டம் காட்டுகிறார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் அனைவரும் நக்கலுடன் சிரித்து சந்தோஷமாக இருந்தார்கள். பாக்கியாவும் இதை பார்த்து சிரித்து கொள்கிறார்.

ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு தடவை முக பாவனையை மாற்றிக் கொண்டு நடிப்பதில் இவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லை என்பதற்கு ஏற்ற மிகப்பெரிய நடிகர். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்துடன் ஒட்டிக் கொள்ளலாமா என்று நினைக்கிறார். ஒருவேளை அப்படி நடந்தாலும் ராதிகா இதை பார்த்து சும்மா விடமாட்டார். வருகிற எபிசோடு நக்கல் நையாண்டி கலந்து குதூகலமாக இருக்கப் போகிறது.

Also read: கோபியை தண்ணி தெளித்து விட்ட பாக்கியா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் ராதிகா