வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டூரிங் டாக்கீஸ் தான் என் லெவல்.. 4 தியேட்டர் அதிபரான ராமராஜனின் உண்மை சம்பவம்

Actor Ramarajan: கிராமத்து நாயகனாக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்த ராமராஜன் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த வயதிலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடித்து அதை சாதித்து காட்டி இருக்கும் இவர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது.

அதாவது ராமராஜன் நளினியை காதலித்து கரம் பிடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காத தம்பதிகளாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிந்து இருந்தாலும் இன்னும் அதே அன்புடன் தான் இருக்கின்றனர். அதை நளினி பலமுறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

Also read: ஹீரோயினா அவங்கதான் வேண்டும்ன்னு அடம்பிடித்த ராமராஜன்.. குயிலை விட்டுட்டு மயிலுக்கு ஆசைப்பட்டதால் விழுந்த அடி

அதிலும் என்னுடைய வீட்டுக்காரர் என அவர் இப்போது கூட வெட்கத்தோடு சொல்வது இவர்கள் இருவருக்குமான அன்பினை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது இவர், ராமராஜன் 4 தியேட்டர் வாங்கிய ஒரு சம்பவத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். ஒருமுறை தன்னுடைய படத்தை பார்க்க நளினியை ராமராஜன் டூரிங் டாக்கீஸ்க்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

கிராமப்புறங்களில் டென்ட் கொட்டா என்று அழைக்கப்படும் தியேட்டர்கள் கூரை போன்ற அமைப்பை கொண்டிருக்கும். அதில் நளினியை படம் பார்க்க அழைத்துச் சென்ற ராமராஜன் இது போன்ற ஒரு தியேட்டராவது நாம் வாங்க வேண்டும் என்று ஏக்கத்தோடு சொன்னாராம். உடனே நளினி உங்களால் முடியும் நீங்கள் நிச்சயமாக வாங்குவீர்கள் என்று ஆதரவு கொடுத்திருக்கிறார்.

Also read: ராஜ்கிரனை நம்பி மோசம் போன ராமராஜன்.. கூடவே இருந்து குழி பறித்த பரிதாபம்

அதைத்தொடர்ந்து பிஸியாக நடித்து வந்த ராமராஜன் விரைவிலேயே ஒன்று அல்ல இரண்டு அல்ல நான்கு தியேட்டர்களை சொந்தமாக வாங்கி இருக்கிறார். டூரிங் டாக்கீஸ் தான் என்னுடைய லெவல் என்று சாதாரணமாக கனவு கண்ட ராமராஜன் ஒரு தியேட்டர் அதிபராக மாறியது நிச்சயம் அவருடைய மனைவியால் தான்.

இந்த விஷயத்தை தற்போது கூறி இருக்கும் நளினி அவரை நாங்கள் உசுப்பேத்தி விட்டு 4 தியேட்டரை வாங்க வைத்தோம் என்று சந்தோஷமாக தெரிவித்துள்ளார். பல வருடங்கள் வெற்றிகரமாக தியேட்டர் பிசினஸை நடத்தி வந்த ராமராஜன் பின்னாளில் அதை விற்றது குறிப்பிடத்தக்கது.

Also read: நடிகையை மருமகளாக எங்க வீட்டில் ஏற்கமாட்டோம்.. பொண்டாட்டி நடிகைன்னு மறந்து கறாராக பேசிய ராமராஜன்.!

- Advertisement -

Trending News