சித்திக் மறைவால் தாமதமானாலும் ரணகளமாக வந்திருக்கும் கிங் ஆஃப் கோதா டிரைலர்.. மிரட்டும் துல்கர் சல்மான்

King Of Kotha Trailer: மலையாளத்தில் பிரபல நடிகரான துல்கர் சல்மானின் கடைசி படமான சீதாராமம் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்ததாக வெளியாகி இருக்கும் படம் தான் கிங் ஆஃப் கோதா. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை போனி கபூரின் ஜி ஸ்டூடியோஸ் மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் பிரசன்னா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வினோத் ஜோஸ், சுரேந்தர், அனிகா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஜேம்ஸ் பிஜியின் மற்றும் ஷான் ரஹ்மான் இருவரும் இந்தப் படத்தில் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

Also Read : அந்த நடிகை வேண்டவே வேண்டாம்.. துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாக இருந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மறைவினால் தாமதமாக வெளியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இன்று ரணகளமாக கிங் ஆப் கோதா ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் இறக்கமற்ற கொடூரன் போல் மிரட்டுகிறார் துல்கர் சல்மான்.

இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்காத நிலையில் முதல் முறையாக துணிச்சலுடன் இந்த கதாபாத்திரத்தை கையாண்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் கால்பந்து விளையாட்டுடன் இந்த கதையை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர்.

Also Read : மறைந்த இயக்குனர் சித்திக் சூப்பர் ஹிட் அடித்த ஆறு படங்கள்.. 400 நாட்கள் ஓடிய கனகாவின் மறக்க முடியாத படம்

இந்நிலையில் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிங் ஆஃப் கோதா படம் ரிலீஸ் ஆக உள்ள முறையில் டிரைலர் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்து உள்ளது. மேலும் சீதாராமம் படத்தை விட இந்த படம் அதிக வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் துல்கர் சல்மான் இருக்கிறார். மேலும் இந்த டிரைலர் வெளியாகி சில மணி நேரங்கள அதிகப் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது.

 

Sharing Is Caring:

அதிகம் படித்தவை