ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அந்த நடிகை வேண்டவே வேண்டாம்.. துல்கர் சல்மான் நடிகை தான் வேணும் என அடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இப்போது மிகப்பெரிய வியாபாரமாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இந்த படத்தின் அறிவிப்பு முன்பே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது இந்த படத்தில் இருந்து சாய்பல்லவி விலகி விட்டாராம்.

Also Read : தோல்வி அடைந்தாலும் மார்க்கெட் மட்டும் குறையல.. இப்பவே 100 கோடிகளை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்

இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழு யோசித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த டாக்டர் மற்றும் டான் படங்களில் நடித்த பிரியங்கா அருள்மோகனை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் யோசனை செய்திருந்தனர்.

ஆனால் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். ஏனென்றால் ஏற்கனவே இரண்டு முறை அவருடன் ஜோடி போட்டு விட்டேன், மீண்டும் இதே கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்காது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Also Read : ஏறிய வேகத்திலேயே சறுக்கிய சிவகார்த்திகேயன்.. தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த எடுத்த அதிரடி முடிவு

அதுமட்டுமின்றி துல்கர் சல்மான் பட நடிகையை இந்த படத்தில் நடிக்க வைக்குமாறு படக்குழுவிடம் சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்துள்ளார். அதாவது சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற சீதா ராமம் படத்தில் நடித்த மிருணாள் தாக்கூரை இந்த படத்தில் நடிக்க வைக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் பேச்சை கேட்டு இப்போது பட குழுவினரும் மிருணாள் தாக்கூர் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அப்படி அவர் சம்மதித்தால் இவரின் முதல் தமிழ் படமாக இதுவாக இருக்கக்கூடும். மேலும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

Also Read : பட வாய்ப்புக்காக நரி தந்திரமாக செயல்பட்ட சிவகார்த்திகேயன்.. ஒரே படத்தில் உச்சத்தை தொற்றலாம்னு நினைப்பு

- Advertisement -

Trending News