உதவாக்கரை மருமகளால் பாக்கியாவிற்கு வந்த சோதனை.. ஈஸ்வரியை ஓட ஓட விரட்டும் கோபியின் மாமியார்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா வீட்டிற்கு வந்த ஈஸ்வரி சும்மா இல்லாமல் ஓவராக கெத்து காட்டி கோபிக்கும் ராதிகாவுக்கும் தொந்தரவாக இருக்கிறார். இதனால் ராதிகா அம்மாவிற்கு சுத்தமாக ஈஸ்வரியை பிடிக்கவில்லை. எப்படியாவது ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு தகுந்தார் போல் முதலில் ராதிகாவிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணிவிட்டார்.

அதற்கு ஈஸ்வரி டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா காபி போட்டு கொடுக்கிறார். அதை வாங்கி குடித்த ஈஸ்வரி இது என்ன காபி நல்லாவே இல்லை என்று திருப்பி ராதிகாவின் அம்மா கையில் கொடுத்து விடுகிறார். உடனே ராதிகா அம்மா அந்த காபி கப்பை கீழே போட்டு ஈஸ்வரி தான் நல்லா இல்லை என்று போட்டு விட்டது போல் சொல்லிவிடுகிறார்.

தாத்தாவிற்கு ஏற்பட்ட மயக்கம்

உடனே ராதிகா, அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி நீங்கள் தான் இப்படி செய்திருப்பீர்கள் என்று ஈஸ்வரிடம் வம்பு பண்ணுகிறார். அனல் ஈஸ்வரி நான் எதுவுமே பண்ணவில்லை என்று கூறினாலும் ராதிகா எதுவும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. உடனே இந்த பஞ்சாயத்து கோபியிடம் போகிறது. ராதிகா ஒரு பக்கம் ஈஸ்வரி இன்னொரு பக்கம் கமலா என்று மூவரும் சேர்ந்து கோபியை டார்ச்சர் பண்ணுகிறார்கள்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் கோபி அனுபவி என்று சொல்வதற்கு ஏற்ப அனுபவித்து வருகிறார். இதற்கிடையில் பாக்யா அமிர்தா கேண்டீன் வேலைக்காக ஹோட்டலுக்கு போகிறார்கள். போகும் முன் தாத்தாவை கவனிக்கும் பொறுப்பை ஜெனி இடம் ஒப்படைத்திருக்கிறார். சாப்பிடுவதற்கு முன் கொடுக்க வேண்டிய மாத்திரையை தாத்தாவிற்கு மறக்காம கொடுக்க சொல்கிறார்.

ஆனால் ஜெனி அதையெல்லாம் மறந்துவிட்டு தூங்கி விடுகிறார். இதனால் எந்த மாத்திரை எப்பொழுது போட வேண்டும் என்று தெரியாமல் மாத்திரையை போடாமல் சாப்பாடு சாப்பிட்டு தாத்தா மயக்கம் போட்டு விடுகிறார். பிறகு வீட்டுக்கு வந்த பாக்கியா பதட்டத்துடன் பார்க்கும் பொழுது சுகர் மாத்திரை எடுக்காததால் தாத்தா மயக்கம் போட்டு விழுந்து விட்டார் என்று எழிலுக்கு போன் பண்ணி சொல்கிறார்.

உடனே வீட்டிற்கு டாக்டரை வர சொல்லி தாத்தாவை செக் பண்ணுகிறார்கள். பிறகு ஜெனி எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று அழுது புலம்புகிறார். கொடுத்த ஒரு வேலையும் உருப்படியாக பண்ணவில்லை. இதில் வேற மருமகளுக்கான அங்கீகாரம் இல்லை என்று அமிர்தாவிடம் கோபப்படுகிறார். இந்த உதவாக்கரை மருமகளை வைத்து பாக்கியா இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கப் போகிறாரோ.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

- Advertisement -