எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்.. ஜவானை மிஞ்சிய கணபத் மிரட்டும் டீசர்

Ganapath Teaser: சமீபத்தில் பாலிவுட் சினிமா மட்டுமன்றி ஒட்டு மொத்த சினிமாவையுமே ஆட்டிப்படைத்தது ஷாருக்கானின் ஜவான் படம். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியான 18 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை தொட்டுவிட்டது.

இப்போதும் திரையரங்குகளில் ஜவான் படம் வசூல் மழையில் நனைந்து வருகிறது. இந்த சூழலில் ஜவான் படத்தையே மிஞ்சும் அளவுக்கு கணபத் என்ற மிரட்டும் டீசர் வெளியாகி இருக்கிறது. அதாவது டைகர் ஷெராப், அமிதாப் பச்சன் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் கணபத் படம் உருவாகி இருக்கிறது.

Also Read : பதான், ஜவான் 1000 கோடி வசூல் செஞ்சாச்சு.. ஷாருக்கானின் ஹாட்ரிக் வெற்றிக்கு ஆப் அடிக்கும் பிரபாஸ்

இந்த படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கியுள்ளார். மேலும் வாசு பாக்னானி தயாரித்திருக்கிறார். மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த படத்தை எடுத்து இருக்கிறார்கள். அதுவும் கணபத் படத்தின் டீசர் ரசிகர்களை வியக்கும் படியாக அமைந்திருக்கிறது.

அதாவது மக்கள் போருக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கும்போது நம்மை காப்பாற்ற ஒரு தலைவன் வர வரைக்கும் இந்த யுத்தத்தை தொடங்க வேண்டாம் என்ற ஒரு குரல் கேட்கிறது. அப்போது தான் டைகர் ஷெராப் என்ட்ரி கொடுக்கிறார். அதுவும் எங்க ஆளுங்களுக்கு ஒரு பிரச்சனை நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் என்ற கர்ஜனை குரலுடன் வருகிறார்.

Also Read : அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

அதன் பிறகு தான் போர் ஆரம்பிக்க இருக்கிறது. மேலும் இந்த டீசர் இப்போது ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளதால் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கணபத் படம் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய்யின் லியோ படத்திற்கு கணபத் கண்டிப்பாக டஃப் கொடுக்கப் போகிறது.