அட்லிக்கு குரு உச்சத்துல இருக்காரு.. 4 வருஷம் பட்ட கஷ்டம், மிரள வைக்கும் ஜவான் மொத்த கலெக்சன்

Jawan-Atlee: யாரு என்ன வேணா சொல்லிட்டு போகட்டும், ஆனா எனக்கு குரு உச்சத்துல இருக்காரு அப்படின்னு கெத்தா சொல்ற அளவுக்கு அட்லி இப்போ செம ஹாப்பி. ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய முதல் ஹிந்தி படமே இப்போது வரலாறு காணாத வசூல் வேட்டை நடத்தி இருக்கிறது.

கடந்த 7ம் தேதி வெளிவந்த ஜவான் அடுத்தடுத்த நாட்களில் கோடிக்கணக்கான வசூலை வாரிசுருட்டியது. இதை பாலிவுட் வட்டாரம் கொஞ்சம் மிரட்சியோடு பார்த்த நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Also read: 5வது நாளில் வசூல் வேட்டையாடிய விஷால்-S.J சூர்யா.. ஜவான் ஓரமா போங்க, ஆச்சரியப்படுத்திய மார்க் ஆண்டனி

அதன்படி ஷாருக்கானின் ரெட்சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ஜவான் இப்போது வரை 937.61 கோடி கலெக்சனை பார்த்திருக்கிறது. அப்படி பார்த்தால் அனைவரும் ஆவலோடு எதிர் நோக்கிய 1000 கோடி வசூல் என்பது ரொம்ப தூரத்தில் இல்லை.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த வசூலை ஜவான் கடந்து விடும் என்ற பேச்சும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த இப்படம் இப்படி ஒரு வசூல் சாதனை நடத்தியது அட்லிக்கான வெற்றி படிக்கட்டாக அமைந்துள்ளது.

Also read: ஜவான் படத்தின் வெற்றியால் ஓவர் மிதப்பில் சுற்றி திரியும் அட்லீ.. அது சரி ஆசைப்படுவதெல்லாம் தப்பில்லையே?

ஏற்கனவே இனி அவர் மும்பை பக்கமே செட்டில் ஆகிவிடுவார் என பேசப்பட்ட நிலையில் இந்த வசூல் வேட்டை மற்ற கான் நடிகர்களின் பார்வையையும் அவர் பக்கம் திருப்பி இருக்கிறது. அந்த வகையில் ஷாருக்கானின் முந்தைய பதான் பட சாதனையையும் ஜவான் விரைவில் முறியடித்து விடும்.

இதற்காகவே காத்திருந்த பாலிவுட் பாட்ஷா அட்லியை நிரந்தரமாக தன் கட்டுக்குள் வைக்கும் வேலையையும் செய்து வருகிறாராம். ஆக மொத்தம் அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என தம்பி இப்போது ஜவான் வெற்றியை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

Also read: எங்க அண்ணன ஏன் ஜவான்ல யூஸ் பண்ணல தெரியுமா.? பெரிய பிளானை தீட்டி வைத்திருக்கும் அட்லி