BB7 Promo: இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களிலும் ரேங்கிங் டாஸ்க் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் ஏழாவது சீசனில் இன்று ரேங்கிங் டாஸ்க் போட்டியாளர்களிடம் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு இந்த டாஸ்க் நடக்கும் போது போட்டியாளர்களிடம் நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. சிலருடைய சுயரூபம் எல்லாம் இந்த டாஸ்கின் மூலம் தான் வெளிப்படும்,
அந்த வகையில் சீசன் 7க்கான ரேங்கிங் டாஸ்கில் முதலிடம் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிட் ஆகிற வாய்ப்பையும் குறிக்கும். இதில் முதல் இடத்தை பிரதீப் பிடித்துக் கொண்டு மற்றவர்கள் யாருக்குமே கொடுக்க மறுக்கிறார். ‘இந்த வீட்டில் என்டர்டைன்மெண்டா பெருசா நீங்க எதுவும் செய்யல, இந்த இடத்துல இருப்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை’ என நிக்சன் பிரதீப்பை முதலிடத்தில் இருந்து நகரச் சொல்கிறார்.
அவர் மட்டுமல்ல விஷ்ணுவும், ‘பிரதீப் முதலிடத்திற்கு தகுதியானவரே கிடையாது. நீங்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருக்கிறீர்கள்’ என முதல் இடத்தை விட்டு நகரச் சொல்கிறார். உடனே பிரதீப், ‘ப்ரோமோவுக்காக நான் விளையாடவில்லை’ என்று விஷ்ணுவுக்கு சவுக்கடி கொடுக்கிறார். அதன் தொடர்ச்சியாக வந்த போட்டியாளர்கள் எல்லாம் பிரதீப்பை கன்வின்ஸ் செய்து முதல் இடத்தை பிடித்துக்கொள்ள பார்க்கின்றனர்.
கடைசியாக வத்திக்குச்சி வனிதாவின் வாரிசு ஜோவிகாவிற்கும் பிரதீப்பிற்கும் கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. ஜோவிகா பயன்படுத்தும் ஆடை, அணிகலன்கள் பார்த்தால் அவர் வசதியான வீட்டு பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா மிடில் கிளாசில் ஃபேமிலியில் இருந்து வந்த நான் இந்த சீசன் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று வனிதாவின் வாரிசுவுடன் பிரதீப் நின்னு விளையாடுகிறார்.
ஜோவிகாவும் பிரதீப்பிடம் தர லோக்கலாக இறங்கி பஜாரி போல் வாடா போடான்னு சண்டை போடுகிறார். இவருக்கு பின் மாயா, யுகேந்திரன் உள்ளிட்டோரெல்லாம் பிரதீப் நின்று கொண்டிருக்கும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என வாதாடுகின்றனர். இதனால் பிக் பாஸ் வீடு சந்தக் கடை போலவே மாறிவிட்டது. அடிதடி சண்டை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஒவ்வொரு நாளும் கொளுத்திப் போடும் வேலையை பார்க்கும் பிக் பாஸ் இந்த முறை ரேக்கிங் டாஸ்கின் மூலம் ஒருவர் மற்றவருடன் உச்சகட்ட அளவில் சண்டை போடும் அளவுக்கு பத்த வச்சுட்டார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பிரதீப் இடம் யாரும் இந்த முதல் இடத்தை மட்டும் பறித்து விட முடியாது. அவர்தான் இந்த டாஸ்கில் வென்று கோல்ட் ஸ்டார் வாங்க போகிறார்.
மேலும் ரேங்கிங் டாக்கில் முதலிடத்தைப் பிடித்த பிரதீப் தான், இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் அடித்து சொல்கின்றனர். அவ்வப்போது இவர் சைக்கோ போல் நடந்து கொண்டாலும், மனதில் பட்டதை யோசிக்காமல் செய்கிறார். பிரதீப் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
தற்போது வெளியான பிக் பாஸ் சீசன் 7ன் பரபரப்பான ப்ரோமோ!