புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சன் டிவியை முந்த முடியாமல் தோற்றுப்போன சேனல்

Serial Top 6 TRP Rating: என்னதான் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மக்களை என்டர்டைன்மென்ட் செய்திருந்தாலும், குடும்பத்துடன் சேர்ந்து பொழுதுபோக்கும் ஒரு விஷயம் சின்னத்திரை மூலம் மட்டுமே கிடைக்கும். அதுவும் தினந்தோறும் வீட்டில் இருந்தபடியே பார்த்து ரசிப்பது சீரியல்களை தான். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் மக்கள் மனதில் இடம் பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த சீரியல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில் தன் கணவருக்கு சில விஷயங்கள் மறந்து போனதால் அவரை மறுபடியும் ரொமாண்டிக் ஹீரோவாகவும் நல்ல ஒரு கேரக்டராகவும் மாற்றி கொண்டு வர வேண்டும் என்று போராடிவரும் இனியா சீரியல் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. அப்படி போராடிய இனியாவிற்கு கடைசியில் அவர் நினைத்தபடியே விக்ரம் நல்லவராக மாறி இனியாவை பற்றி புரிந்து கொண்டார்.

அடுத்ததாக அண்ணன் தங்கை பாசம் எப்பொழுதுமே தோற்றுப் போகாது என்பதற்கு ஏற்ப பல வருடங்களாக சிகல்களையும் பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டுவரும் வானத்தைப்போல சீரியல் 5வது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்து கடந்த பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக இருந்த எதிர்நீச்சல் சீரியல் கொஞ்ச நாட்களாகவே பின்னுக்குப் போய்விட்டது. அதனால் இந்த வாரம் 4வது இடத்தில் இருக்கிறது.

Also read: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த குணசேகரனின் தங்கை.. எஸ்கேஆர் வீட்டில் தஞ்சம் அடைந்த ஆதிரை

அடுத்து முதல் பாகம் ஓரளவுக்கு முடிந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்தை கையில் எடுத்து புதுக்கதை அம்சங்களுடன் வந்து கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. குடும்பமே தன் தலையில் தூக்கி சுமந்து கொண்டு தங்கை, தம்பி, அண்ணனுக்கு பிரச்சினை வரும் பொழுது அதை எதிர்கொள்ளும் கயல் சீரியல் 2வது இடத்தை பிடித்திருக்கிறது.

அடுத்ததாக எல்லா சீரியல்களையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தில் தற்போது இருப்பது சிங்க பெண்ணே சீரியல். ரொமான்டிக், காதல் மற்றும் எதார்த்தமான நடிப்புடன் மக்களை சமீபத்தில் கவர்ந்த ஒரே சீரியல் இதுதான். முக்கியமாக அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் இவர்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டத்தில் யாருடைய காதல் வெற்றி பெறும் என்பதை உச்சகட்ட சுவாரசியத்துடன் கதை நகர்ந்து வருகிறது.

இப்படி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை பிடித்து சிம்ம சொப்பனமாக இருக்கும் சேனல் தான் சன் டிவி. அந்த வகையில் இவர்களுடன் போட்டி போட்டு பல புது சீரியல்களை கொண்டு வந்தாலும் சன் டிவி சேனலை முந்தமுடியாமல் தோற்றுப் போய் நிற்கும் சேனல் விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் சேனல்.

Also read: சன் டிவி நடிகையை கரம் பிடித்த 46 வயது ரெடிங் கிங்ஸ்லி.. தீயாய் பரவும் கல்யாண போட்டோ

- Advertisement -

Trending News