2024-ல் ரிலீஸ் ஆகப்போகும் வெற்றி படத்தின் இரண்டாம் பாகம்.. இந்தியன் தாத்தாவுடன் மோத போகும் கான்ஸ்டபிள்

The second part of will be released in 2024: எத்தனையோ படங்கள் வெளி வந்தாலும் சில படங்களை பார்க்கும் பொழுது தான் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும். அந்த அளவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அப்படிப்பட்ட படங்களை மறுபடியும் எடுத்து இரண்டாம் பாகமாக உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் சில படங்களின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகப்போகிறது.

இந்தியன் 2: 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் படம் வெளிவந்தது. லஞ்சம் மற்றும் ஊழலை அகற்றும் விதமாக இந்தியன் தாத்தாவாக கமல் நடித்து மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த வெற்றியின் தொடர்ச்சியாக சில வருடங்களுக்கு முன் இரண்டாம் பாகமாக உருவாகியது. ஷங்கர் இயக்கி கமல் நடிப்பில் உருவாகிய இந்தியன் 2 படம் ஏப்ரல் 11ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர போகிறது.

விடுதலை 2: கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் விடுதலை. மேலும் இப்படத்தில் சூரி கான்ஸ்டபிள் ஆகவும், விஜய் சேதுபதி பெருமாள் கேரக்டரிலும் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் வாயிலாக விடுதலை பார்ட் 2 பகுதியில் விஜய் சேதுபதிக்கான கதையை மையமாக வைத்து ஏப்ரல், மே மாதங்களில் வெளிவர இருக்கிறது.

7ஜி ரெயின்போ காலனி 2: செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாகவும், காதலில் தோல்வியுற்றால் காதலனின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை படமாக காட்டப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ரவி கிருஷ்ணாவை வைத்து செல்வராகவன் இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளுக்கு வந்து விடும்.

Also read: டிவி சீரியல் தான் உங்களுக்கு லாயக்கு.. ஜெயம் ரவியின் சைரனை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை

சர்ப்பட்ட பரம்பரை 2: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி நடிப்பில்
சர்ப்பட்ட பரம்பரை திரைப்படம் வெளிவந்தது. பரம்பரை பரம்பரையாக குத்து சண்டையில் ஈடுபடும் குடும்பங்களுக்கு இடையே நடக்கும் யுத்த போராட்டம். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது.

சூது கவ்வும் 2: 2013 நலன் குமாரசாமி இயக்கத்தில் டார்க் காமெடி திரைப்படமாக சூது கவ்வும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் அசோக் செல்வன், பாபி சிம்ஹா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரையரங்குகளில் வந்து விடும்.

தனி ஒருவன் 2: மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் படம் வெற்றி பெற்றது. அத்துடன் இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த சித்தார்த் அபிமன்யு என்கிற அரவிந்த்சாமிக்கும் செகண்ட் இன்னிங்ஸ் ஆக கை கொடுத்தது. மேலும் இப்படம் ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றதால் இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தனி ஒருவன் 2 அனைத்து திரையரங்களிலும் வெளிவர வாய்ப்பு இருக்கிறது.

Also read: சைரனை ஜெயம் ரவி மட்டும் நம்பி இல்ல.. 8 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்