சின்மயிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்.. தடையை மீறி வாய்ப்பு தர காரணம்

Lokesh-Chinmayi: லியோ படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் பின்னணி பாடகி சின்மை திரிஷாவுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் டப்பிங் யூனியன் சில காலம் சின்மயி படங்களில் டப்பிங் பேசக்கூடாது என தடை விதித்துள்ளது. அதையும் மீறி லோகேஷ் லியோ படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இதற்கான காரணம் என்ன என்பதை பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். அதாவது இதுவரை லோகேஷ் படத்தில் கதாநாயகிகள் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தாலும் அதிக முக்கியத்துவம் தர மாட்டார்கள். லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷா இடையே ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதாக லோகேஷ் கூறியிருக்கிறார்.

Also Read : பாதியிலேயே கழட்டி விட்டு டாட்டா சொன்ன நயன்தாரா.. மொத்த பிளானையும் மாற்றிய லோகேஷ்

எவர்கிரீன் ஜோடியான இவர்களின் கெமிஸ்ட்ரி லியோ படத்தில் பக்கம் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. மேலும் த்ரிஷாவின் குரலுக்கு சின்மயி இந்த படத்தில் உயிர் கொடுத்திருக்கிறார். என்னை பொறுத்தவரையில் எனக்கு வேலை ஆக வேண்டும். சின்மயிக்கு டப்பிங் பேச தடை இருப்பதை பற்றி எல்லாம் நான் கொஞ்சமும் யோசிக்கவில்லை.

அதேபோல் த்ரிஷாவுக்கு சின்மயி குரல் தான் பக்காவாக பொருந்தி இருக்கிறது. தமிழில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் திரிஷாவுக்கு சின்மயி தான் குரல் கொடுத்துள்ளார். மேலும் லியோ படத்தை பார்க்கும்போது உங்களால் அது உணர முடியும் என்று லோகேஷ் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Also Read : லோகேஷ், நெல்சன் தான் எனக்கு தெய்வம் மாதிரி தெரியுறாங்க.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட லாரன்ஸ் மாஸ்டர்

அதோடு மட்டுமல்லாமல் சின்மயி தனக்கு தடை விதிக்கப்பட்டாலும் வாய்ப்பு கொடுத்ததற்காக லோகேஷ் மற்றும் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறியிருக்கிறார். மேலும் இப்போது விஜய் ரசிகர்கள் லியோ ரிலீஸுக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

லோகேஷ் படத்தில் சின்ன விஷயமாக இருந்தாலும் அதை மெனக்கெட்டு செய்து முடித்திருக்கிறார். இப்போது ஊடகங்கள் வாயிலாக லியோ படத்தை பற்றிய நிறைய விஷயங்களை சொல்லி வருவது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும் படத்தை பார்க்கும் ஆர்வத்தையும் அதிகமாகி உள்ளது.

Also Read : விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்